சத்தியமங்கலம் நகராட்சி பள்ளி வளாகத்தில் கோடைக்கால சிலம்பாட்ட பயிற்சி அளிக்கப்பட்டது. கோடை விடுமுறையைப் பயனுள்ளதாக மாற்றிய இச்சிலம்பாட்டம் பயிற்சியில் 13 வயது முதல் 16 வயதுக்குட்பட்ட மாணவர்கள் கலந்துகொண்டனர். மாணவர்களுக்குச் சிலம்பாட்ட பயிற்சியாளர் பொன்னுசாமி, சிலம்பாட்டத்தின் பல்வேறு நுணுக்கங்களைக் கற்றுத்தந்தார். அதைத் தொடர்ந்து, இன்றைய காலகட்டத்தில் குழந்தைகள் தங்களைப் பாதுகாத்துக்கொள்ள, தற்காப்புக் கலையில் உள்ள நுணுக்கங்கள் பயிற்றுவிக்கப்பட்டது. மாணவர்களுக்குத் தீப்பந்தம், நெடுங்கம்பு, புலி ஆட்டம், சுருள் கம்பி, சிறுத்தா, பிச்சுவா, மான்கொம்பு போன்ற பாரம்பரிய வீரவிளையாட்டுகள் குறித்த பயிற்சியும் அளிக்கப்பட்டது.
கோடை விடுமுறையை ஆக்கப்பூர்வமாக கழித்த மாணவர்கள்! - கோடை விடுமுறை
ஈரோடு: கோடை விடுமுறையில் பாரம்பரிய கலையான சிலம்பாட்டம் போன்ற விளையாட்டு பயிற்சிகளுக்கு பிள்ளைகளை அனுப்புவதில் பெற்றோர்கள் ஆர்வம் காட்டி வருகின்றனர்.
பயிற்சி பெற்ற மாணவர்கள், நிறைவு நாளான இன்று, தாங்கள் கற்ற கலையை செயல் விளக்கமாகப் பெற்றோர்கள், பார்வையாளர்கள் மத்தியில் செய்து காண்பித்தனர். குழந்தைகளின் இச்சாகச விளையாட்டுகள் காண்போரை மெய்சிலிர்க்க வைத்தது. இப்போட்டியில் வென்ற மாணவர்களுக்கு பரிசும், கேடயமும் வழங்கி கௌரவிக்கப்பட்டது. தமிழர்களின் பாரம்பரியத்தைக் குழந்தைகளுக்கு கற்று வருவதைப் பெருமையாக கருதுவதாகவும், கோடை விடுமுறையில் தொலைக்காட்சி பார்த்து பொழுதுபோக்கும் இளைஞர்கள் மத்தியில், உடலும், மனமும் வலிமை பெறக் குழந்தைகள் பாரம்பரிய சிலம்பாட்டம் பயிற்சி பெற்றது பெருமைக்குரியதாகப் பெற்றோர் தெரிவித்தனர்.