தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / city

1 கோடி ரூபாய் மதிப்பிலான தடை செய்யப்பட்ட போதை பொருட்கள் பறிமுதல் - Seizure of banned gutka, pan masala

ஈரோடு: பண்ணாரி சோதனைச்சாவடியில் ரூ.1 கோடி மதிப்பிலான தடை செய்யப்பட்ட குட்கா, பான்மசாலா போன்ற 8 வகையான போதை பொருட்கள் பறிமுதல் செய்யப்பட்டன.

1 கோடி ரூபாய் மதிப்பிலான தடைசெய்யப்பட்ட போதை பொருட்கள் பறிமுதல்
1 கோடி ரூபாய் மதிப்பிலான தடைசெய்யப்பட்ட போதை பொருட்கள் பறிமுதல்

By

Published : Jan 22, 2021, 11:49 AM IST

கர்நாடக மாநிலத்திலிருந்து தமிழ்நாட்டுக்கு தடை செய்யப்பட்ட போதைப் பொருட்கள் பண்ணாரி சோதனைச்சாவடி வழியாக கடத்தப்படுவதாக கிடைத்த தகவலையடுத்து, திட்டமிட்டு குற்றத்தடுப்பு நுண்ணறிவு காவல் துறையினர் பண்ணாரி சோதனைச்சாவடியில் வாகன தணிக்கையில் ஈடுபட்டனர்.

அப்போது கர்நாடக மாநில எல்லையான ஹானூரில் இருந்து பல்லடம் நோக்கி சென்ற சரக்கு வாகனத்தை தடுத்து நிறுத்தி சோதனையிட்டனர். லாரியில் அடுக்கி வைத்திருந்த 20 மக்காச்சோளம் மூட்டைகளை அகற்றியபோது அதில் சுமார் 8.5 டன் அளவுள்ள பான்மசாலா, குட்கா போன்ற தடை செய்யப்பட்ட போதைப்பொருட்கள் பதுக்கி வைத்திருப்பது தெரியவந்தது.

இது தொடர்பாக கர்நாடக மாநிலம் மார்டல்லியைச் சேர்ந்த லாரி ஓட்டுநர் காந்தராஜ். நீலகிரி மாவட்டம் குந்தாவைச் சேர்ந்த ரமேஷ் ஆகியோரை காவல் துறையினர் கைது செய்து சத்தியமங்கலம் காவல் நிலையம் அழைத்து சென்றனர். லாரியில் இருந்த பண்டல்கள், மூட்டைகள், பெட்டிகளை உடைத்து காவல் துறையினர் ஆய்வு செய்தபோது 1 கோடி ரூபாய் மதிப்பிலான சுமார் 8.5 டன் குட்கா, பான்மசாலா, மாணிக்சந்த் போன்ற 8 வகையான போதை பாக்குகள் இருந்ததை கண்டறிந்தனர். இதையடுத்து பறிமுதல் செய்து, அவற்றை சத்தியமங்கலம் காவல் துறையினரி்டம் திட்டமிட்ட குற்றத்தடுப்பு நுண்ணறிவு காவல் துறையினர் ஒப்படைத்தனர்.

இதையும் படிங்க:ஒரு ஆம்லெட்டை இரண்டு இலையில் கேட்ட போதை பாய்ஸ்: தராததால் அடிதடி!

ABOUT THE AUTHOR

...view details