ஈரோடுமாவட்டம் கோபிசெட்டிபாளையம் அருகே உள்ள வேலம்பாளையம் அரசு ஊராட்சி ஒன்றிய தொடக்கப்பள்ளி வாக்குச்சாவடியில் தமிழ்நாடு சுற்றுச்சூழல் துறை அமைச்சர் கே.சி.கருப்பணன் வரிசையில் நின்று வாக்காளித்தார்.
அதனை தொடர்ந்து செய்தியாளர்களைச் சந்தித்த அமைச்சர் கருப்பணன், "தமிழ்நாட்டில் நல்லாட்சி நடைபெற்று கொண்டிருப்பதால் 90 விழுக்காடு அதிமுக கூட்டணி வெற்றி பெற வாய்ப்புள்ளது. மாநகராட்சி, நகராட்சி, பேரூராட்சி தேர்தல் விரைவில் நடைபெறும். இதற்காக முதலமைச்சர் பழனிசாமி ஆய்வு மேற்கொண்டுள்ளார்" என்றார்.