தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / city

காவல் வாகனம் மோதி பள்ளி மாணவன் பலத்த காயம் - காவல் வாகனம் மோதி பள்ளி மாணவன் பலத்த காயம்

காவல் துறையின் வாகனம் மோதி பள்ளி மாணவன் பலத்த காயமடைந்து தீவிர சிகிச்சைப் பிரிவில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.

காவல் வாகனம் மோதி பள்ளி மாணவன் பலத்த காயம்
காவல் வாகனம் மோதி பள்ளி மாணவன் பலத்த காயம்

By

Published : Jan 13, 2022, 10:32 PM IST

ஈரோடு:பவளத்தாம்பாளையத்தில் காவல் துறையின் வாகனம் மோதி பள்ளி மாணவர் பலத்த காயங்களுடன் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.

ஈரோடு மாவட்டம் வேப்பம்பாளையம் பகுதியைச் சேர்ந்தவர் கனகராஜ். இவரது மகன் கோபாலகிருஷ்ணன் (15) பெருந்துறை சாலையில் உள்ள தனியார் பள்ளியில் 10ஆம் வகுப்பு படித்துவருகிறார்.

இன்று (ஜனவரி 13) மாலை பள்ளி முடிந்து வீட்டுக்குச் செல்ல சாலையில் சென்றுகொண்டிருந்தார். செல்லும் வழியில் பள்ளிக்கு எதிரே உள்ள சாலையைக் கடக்க முயற்சித்துள்ளார்.

அப்போது கோயமுத்தூரிலிருந்து ஈரோடு ஆயுதப்படை வளாகம் நோக்கி வந்த காவல் துறையின் பாதுகாப்பு வாகனம் கோபாலகிருஷ்ணன் மீது பயங்கரமாக மோதியுள்ளது. தூக்கி வீசப்பட்ட மாணவன் கோபாலகிருஷ்ணனின் தலையில் பலத்த காயம் ஏற்பட்டது.

காவல் வாகனம் மோதி பள்ளி மாணவன் பலத்த காயம்
இதனை அடுத்து காயமடைந்த மாணவன் மீட்கப்பட்டு காவல் துறையின் வாகனத்திலேயே மருத்துவமனைக்கு அழைத்துச் செல்லப்பட்டார். அங்கு அவர் தீவிர சிகிச்சைப் பிரிவில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சைப் பெற்றுவருகிறார். இச்சம்பவம் குறித்து ஈரோடு தாலுகா காவல் துறையினர் விசாரணை மேற்கொண்டுவருகின்றனர்.

For All Latest Updates

TAGGED:

ABOUT THE AUTHOR

...view details