ஈரோடு மாவட்டம் கோபிசெட்டிபாளையத்தை அடுத்த அளுக்குளி, கலிங்கியம் ஆகிய ஊராட்சிகளில் 11 லட்சம் ரூபாய் மதிப்பில் புதிதாக அமைக்கப்படும் சாக்கடை மற்றும் ஆழ்துளைக்கிணறு அமைக்கும் பணிகளை பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் செங்கோட்டையன் தொடங்கி வைத்தார். அதனைத் தொடர்ந்து செய்தியாளர்களைச் சந்தித்த அவர், “ பத்தாம் வகுப்பு பொதுத்தேர்வுக்கு பின்னரே மாணவர் சேர்க்கை நடைபெற வேண்டும். இதை மீறும் பள்ளிகள் மீது நடவடிக்கை எடுக்கப்படும்.
கரோனா அச்சுறுத்தல் நேரத்தில் சிறப்பு வகுப்பு என்ற பெயரில் மருத்துவ விதிகளை மீறினால் பள்ளிகள் மீது கடும் நடவடிக்கை பாயும்.
வைரஸ் பாதிப்பு அதிகமுள்ள சென்னை, திருவள்ளூர், அரியலூர், காஞ்சிபுரம் ஆகிய மாவட்டங்களில் பன்னிரெண்டாம் வகுப்பு விடைத்தாள் திருத்தும் பணிக்கு ஆசிரியர்கள் செல்ல விரும்பாத நிலையில், விடைத்தாள்கள் வேறு மாவட்டங்களுக்கு அனுப்பப்பட்டுள்ளன.
விதிகளை மீறி மாணவர் சேர்க்கை நடந்தால் கடும் நடவடிக்கை - அமைச்சர் செங்கோட்டையன் விளாங்கோப்பை மலைக்கிராமத்திற்கு சாலை அமைக்க நிதிகள் ஒதுக்கப்பட்டு டெண்டர் விடப்பட்டுள்ளது. வரும் ஜூன் 3ஆம் தேதி அதற்கான பணிகள் தொடங்கவுள்ளன. அங்கு ஆரம்பப் பள்ளி அமைக்க வனத்துறையிடம் 50 சென்ட் நிலம் கேட்கப்பட்டுள்ளது. திருப்பூரில் ஆயிரக்கணக்கான வெளிமாநிலத் தொழிலாளர்கள் சொந்த ஊருக்குச் செல்ல நடவடிக்கை எடுக்காத திருப்பூர் மக்களவை உறுப்பினர் சுப்பராயன், அரசுப்பணிகளை குறை கூறுவது வேதனைக்குறியது“ எனத் தெரிவித்தார்.
இதையும் படிங்க: கல்வி அமைச்சர் தொகுதியில் ஆரம்பப்பள்ளி கூட இல்லை: சுப்பராயன் எம்.பி. கவலை