ஈரோடு மாவட்டம் சத்தியமங்கலம் அடுத்த கோணமூலை, வெள்ளமேடு தோட்டத்தைச் சேர்ந்தவர் ரங்கசாமி. இவரது தோட்டத்து கிணற்றில் மண்ணுளிப்பாம்பு உள்ளதாக சத்தியமங்கலம் வனத் துறையினருக்குத் தகவல் அளித்தார்.
கிணற்றில் கிடந்த மண்ணுளிப் பாம்பு மீட்பு - Satyamangalam Forest Department recover snake
ஈரோடு: கிணற்றின் படிக்கட்டில் தொங்கிக்கொண்டிருந்த மண்ணுளி பாம்பினை வனத் துறையினர் பாதுகாப்பாக மீட்டனர்.
கிணற்றில் கிடந்த மண்ணுளிப் பாம்பு மீட்பு
உடனே பாம்புபிடி வீரர் பார்த்திபன் என்பவருடன் அங்கு வந்த வனத் துறையினர் படிக்கட்டில் உயிருக்குப் போராடிக்கொண்டிருந்த மண்ணுளிப்பாம்பை லாவகமாகப் பிடித்தனர்.
ஒருவேளை படிக்கட்டில் தொங்கிக்கொண்டிருந்த பாம்பை மீட்காமலிருந்தால் அது 60 அடி கிணற்றுக்குள் விழுந்து உயிரிழந்திருக்கும் என்று வனத் துறையினர் தெரிவித்தனர்.