தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / city

சாலையில் கவிழ்ந்த பால் டேங்கர் லாரி - milk tanker lorry

சத்தியமங்கலம் அருகே பால் டேங்கர் லாரி கவிழ்ந்த விபத்தில் ஆயிரம் லிட்டர் பால் கீழே கொட்டியது.

பால் டேங்கர் லாரி விபத்து
பால் டேங்கர் லாரி விபத்து

By

Published : Jul 3, 2021, 7:38 AM IST

சத்தியமங்கலம் : சத்தியமங்கலம் சுற்றுவட்டார பகுதி விவசாயிகளிடம் தனியார் நிறுவனத்தினர் பால் கொள்முதல் செய்து வருகின்றனர். இங்கு கொள்முதல் செய்யப்படும் பால், டேங்கர் லாரிகளில் நிரப்பப்பட்டு தர்மபுரி மாவட்டம் பாலக்கோடு பால் ஆலைக்கு கொண்டு செல்லப்படுகிறது.

இந்நிலையில், வெள்ளிக்கிழமை சத்தியமங்கலம் பகுதியில் தனியார் பால் கொள்முதல் நிலையங்களில் இருந்து பால் நிரப்புவதற்காக பால் டேங்கர் லாரி ராமபைலூர் கிராமத்திற்கு சென்று கொண்டிருந்தது. ராமபைலூர் குளம் அருகே சென்றபோது, ஓட்டுநரின் கட்டுப்பாட்டை இழந்த லாரி சாலையோரம் கவிழ்ந்தது.

சாலையில் கவிழ்ந்த பால் டேங்கர் லாரி

இந்த விபத்தில் லாரி ஓட்டுனர் மணி லேசான காயங்களுடன் உயிர் தப்பினார். லாரி கவிழ்ந்ததால் டேங்கரிலிருந்து இருந்து பால் கீழே கொட்டுவதை கண்ட ஓட்டுனர் மணி உடனடியாக பால் நிரப்பும் கேன்களில் பிடித்து பாலை நிரப்பினார். இருப்பினும் 1000 லிட்டர் பால் கீழே கொட்டியது. இதைத்தொடர்ந்து லாரி கிரேன் மூலம் மீட்கப்பட்டது. விபத்து குறித்து சத்தியமங்கலம் போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

இதையும் படிங்க :ரப்பர் குடோனில் தீ விபத்து - பல லட்ச ரூபாய் மதிப்புள்ள பொருள்கள் நாசம்

ABOUT THE AUTHOR

...view details