ஈரோடுஅடுத்த நசியனூர் - ராயபாளையம் பகுதியைச்சேர்ந்தவர் ராமசாமி. இவர் தமிழ்நாடு பால் உற்பத்தியாளர்கள் சங்கத்தின் மாநிலப்பொருளாளராக உள்ளார். இவருக்குச்சொந்தமான நிலத்தில் மா மரங்கள் மற்றும் வனத்துறையினர் அனுமதி உடன் சந்தன மரங்களை நட்டு வளர்த்து வந்தார்.
இந்நிலையில் கடந்த ஐந்து நாட்களுக்கு முன்பாக இவரது வீட்டின் பின்பகுதியில் இருந்த சந்தன மரம் ஒன்றை ஐந்து பேர் கொண்ட அடையாளம் தெரியாத நபர்கள் வெட்டி கடத்திச்சென்றுள்ளனர். இது தொடர்பாக வனத்துறையினரிடம் புகார் அளிக்கப்பட்டு விசாரணை நடைபெற்று வருகிறது.
இதனையடுத்து அதே தோட்டத்துப்பகுதியில் இருந்த மேலும் ஒரு சந்தன மரத்தை நேற்று(ஆக.04) இரவு வந்த ஐந்து பேர் கொண்ட கும்பல் கடத்திச்சென்றுள்ளனர். அதிகாலையில் எழுந்து பார்த்தபோது மரம் வெட்டப்பட்டு இருப்பதைக்கண்டு ராமசாமி தரப்பினர் அதிர்ச்சி அடைந்தனர்.
இதன் மொத்த எடை 200 கிலோ இருப்பதாகவும், இதனுடைய மொத்த மதிப்பு 60 லட்சம் ரூபாய் இருக்கும் எனவும் பால் உற்பத்தியாளர்கள் சங்கத்தின் மாநிலப்பொருளாளர் ராமசாமி தெரிவித்துள்ளார். இந்த சந்தன மரங்களை வெட்டிக் கடத்தும் பரபரப்பான சிசிடிவி காட்சிகளுடன் வனத்துறையினரிடம் அவர் புகாரும் அளித்துள்ளார். இது தொடர்பாக வனத்துறையினர் சந்தன மரத்தை வெட்டிக்கடத்திய கும்பலைத் தேடி வருகின்றனர்.
60 லட்சம் ரூபாய் மதிப்புள்ள சந்தன மரம் வெட்டிக்கடத்தல் இதையும் படிங்க:குழந்தையின் மாமிசத்தையே தாய்க்கு உணவாக அளித்த ஐஎஸ்ஐஎஸ்ஸின் கொடூரச்செயல்!