தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / city

காவிரி கரையோர மக்களுக்கு வெள்ள அபாய எச்சரிக்கை! - increase in water in mettur dam

ஈரோடு: மேட்டூர் அணையிலிருந்து உபரி நீர் திறக்கப்பட்டுள்ளதால் ஈரோடு மாவட்ட காவிரி கரையோரப் மக்களுக்கு தண்டோரா மூலம் வெள்ள அபாய எச்சரிக்கை விடுக்கப்பட்டது.

தண்டோரா மூலம் வெள்ள அபாய எச்சரிக்கை

By

Published : Sep 6, 2019, 11:58 PM IST

மேட்டூர் அணையிலிருந்து உபரி நீர் திறக்கப்பட்டுள்ளதால் ஈரோடு மாவட்ட காவிரி கரையோரப் பகுதிகளில் வருவாய்துறை அலுவலர்கள் தீவிர கண்காணிப்பு பணியில் ஈடுபட்டுள்ளனர்.

மேலும் ஈரோடு கருங்கல்பாளையம் காவிரி கரையில் வட்டாட்சியர் ரவிச்சந்திரன் தலைமையில் கண்காணிப்பு பணியில் ஈடுபட்ட வருவாய்துறை அலுவலர்கள் தண்டோரா மூலம் பொதுமக்களுக்கு எச்சரிக்கை விடுத்தனர். காவிரி ஆற்றில் இறங்கி குளிக்கவோ, துணி துவைக்கவோ, கால்நடைகளை குளிப்பாட்டவோ, புகைப்படம் எடுக்கவோ கூடாது என தெரிவிக்கப்பட்டது.

காவிரி கரையோர மக்களுக்கு வெள்ள அபாய எச்சரிக்கை

இதேபோல், தாழ்வான பகுதிகளில் வசிக்கும் மக்களை தங்க வைப்பதற்காக பள்ளிகள், சமுதாயக் கூடங்கள், தனியார் திருமண மண்டபங்கள் தயார் நிலையில் வைக்கப்பட்டுள்ளன.

ABOUT THE AUTHOR

...view details