ஈரோடு:தமிழ்நாட்டில் நேற்று (ஆக.23) முதல் கர்நாடகம், ஆந்திரா மாநில பொதுப்போக்குவரத்துக்கு அனுமதியளித்ததையடுத்து தமிழ்நாடு - கர்நாடகா இடையே தனியார், அரசுப்பேருந்துகள் இயக்கப்பட்டு வருகின்றன.
இந்நிலையில், நேற்று (ஆக.23) ஈரோடு மாவட்டம் சத்தியமங்கலத்திலிருந்து மைசூரு, கொல்லேகல், சாம்ராஜ்நகர் சென்ற தமிழ்நாடு பேருந்துகளை, மைசூரு மாவட்ட நிர்வாகம் அனுமதிக்க மறுத்துள்ளது.
ஆர்டிபிசிஆர் சான்றிதழ் அவசியம்
இதனால், அரசுப் பேருந்துகள் சில மணி நேரம் காத்திருந்ததாக தமிழ்நாடு போக்குவரத்துத்துறை வட்டாரங்கள் தெரிவித்தன.
கரோனா தடுப்பு விதிமுறைகளின்படி கர்நாடகவிற்குள் செல்லும் தமிழ்நாடு பேருந்துகளில் பயணிக்கும் பயணிகள் ஆர்டிபிசிஆர் நெகடிவ் சான்றிதழ் அல்லது இரு தவணை தடுப்பூசி செலுத்தியதற்கான சான்றிதழ் காண்பிக்க வேண்டும்.
இவ்வாறு நெறிமுறைகளை கடைபிடிக்காத தமிழ்நாடு பேருந்துகள், கர்நாடகாவிற்குள் செல்ல அனுமதிக்க இயலாது என மைசூரு மாவட்ட ஆட்சியர் ரவி உத்தரவிட்டார்.