ஈரோடு: நசியனூர் பெருமாபாளையம் பகுதியில் உள்ள பள்ளிபாளையம் கிழக்கு வீதியில் சாலை புறம்போக்கு நிலத்தை, ஆக்கிரமித்து வீடுகள் கட்டப்பட்டுள்ளதாக புகார்கள் எழுந்தன. இந்த சம்பவம் தொடர்பாக நீதிமன்றத்தில் வழக்கு தொடரப்பட்டது. அப்போது நீதிமன்றம் சாலை புறம்போக்குகளை ஆக்கிரமித்து கட்டிய வீடுகளை அகற்ற உத்தரவிட்டது.
அதோடு வீடுகளை காலி செய்ய ஆறு மாத காலம் அவகாசம் அளித்தது. ஆனால் காலக்கொடு முடிந்தும் வீடுகளை காலி செய்யாததால் வருவாய்த்துறையினர் நில அளவையாளர்கள் மூலம் நிலங்களை அளந்து வீடுகளை இடிக்கும் பணியில் ஈடுபட்டனர். இதற்கு எதிர்ப்பு தெரிவித்த மக்கள், தங்களுக்கு மாற்று இடம் வழங்க வேண்டும் என்று கோரிக்கை விடுத்து போராட்டத்தில் ஈடுபட்டனர். ஜேசிபி இயந்திரம் முன்பு படுத்து பரபரப்பை ஏற்படுத்தினர்.