தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / city

பண்ணாரி கோவிலில் இன்று மறுபூஜை: அரசு பேருந்துகள் ஓடாததால் பக்தர்கள் அவதி - Pannari temple

பண்ணாரி கோவிலில் இன்று (திங்கள்கிழமை) மறுபூஜை நடைபெற்ற நிலையில், அரசு பேருந்துகள் ஓடாததால் தனியார் பேருந்து படிக்கட்டியில் தொங்கியபடி பக்தர்கள் பயணம் செய்தனர்.

பண்ணாரி
பண்ணாரி

By

Published : Mar 28, 2022, 4:07 PM IST

ஈரோடு: மத்தியஅரசின் தனியார் மயம், டீசல் விலை உயர்வுக்கு எதிர்ப்பு உள்ளிட்ட 12 அம்ச கோரிக்கைகளை வலியுறுத்தி தமிழ்நாட்டில் 12 தொழிற்சங்கங்கள் பொது வேலை நிறுத்தப் போராட்டத்தில் ஈடுபட்டுள்ளன.

குறிப்பாக அரசு போக்குவரத்து கழக தொழிற்சங்க ஓட்டுநர்கள், நடத்துனர்கள் வேலைநிறுத்தத்தில் ஈடுபட்டதால் ஈரோடு மாவட்டத்தில் அரசு பேருந்துகள் இயங்கவில்லை. இதனால் தமிழகம் கர்நாடக இடையே பேருந்து சேவை பாதிக்கப்பட்டது.

தனியார் பேருந்துகள் மட்டுமே இயங்குகின்றன. பிரசித்தி பெற்ற பண்ணாரிமாரியம்மன் கோவிலில் இன்று குண்டம் மறுபூஜை என்பதால் ஆயிரக்கண்ககான பக்தர்கள் சத்தியமங்கலம் வந்து பண்ணாரி செல்வார்கள்.

தற்போது அரசு சிறப்பு பேருந்துகள் ரத்து செய்யப்பட்டதால் தனியார் பேருந்துகளில் பக்தர்கள் கூட்டம் அதிகமாக காணப்படுகிறது. சத்தியமங்கலத்தில் இருந்து பண்ணாரிக்கு தனியார் பேருந்துகளில் பயணிகளில் படிக்கட்டில் ஆபத்தான முறையில் பயணிக்கின்றனர்.

பண்ணாரி கோவிலில் இன்று மறுபூஜை: அரசு பேருந்துகள் ஓடாததால் பக்தர்கள் அவதி

சத்தியமங்கலம் அரசுப்பள்ளி, அரசு கல்லூரிக்கு வரும் மாணவர்கள் தனியார் பேருந்து நம்பியிருப்பதால் தனியார் பேருந்துகளில் மாணவர்கள் கட்டணம் செலுத்தி பயணித்தனர்.

இதையும் படிங்க :ஈரோடு பண்ணாரி அம்மன் கோயிலில் குவிந்த பக்தர்கள்!

ABOUT THE AUTHOR

...view details