ஈரோடு மாநகரின் புறநகர்ப் பகுதியும், குடியிருப்பு மிகுந்த பகுதியாகவும் உள்ள கலைஞர் நகர் பகுதியில் ரயில்வே இருப்புப் பாதை அமைந்துள்ளது. கலைஞர் நகர் மற்றும் கே.கே.நகர் பகுதியைப் பிரித்திடும் வகையில் ரயில்வே இருப்புப்பாதை அமைந்துள்ளதால், ரயில் வராத நேரங்களில் இவ்வழியை அதிகளவிலான மக்கள் குறுக்கு வழியாகப் பயன்படுத்தி வருகின்றனர்.
இந்நிலையில், அப்பகுதியைச் சேர்ந்த சிலர் ரயில்வே இருப்புப்பாதை பகுதியில் மூன்று மூட்டைகளில் நியாய விலைக் கடைகளில் விநியோகம் செய்யப்பட்ட சுமார் நூறு கிலோ பச்சரிசி குப்பையில் கொட்டப்பட்டிருப்பது கண்டு அதிர்ச்சியடைந்தனர்.