தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / city

மீண்டும் பசுமைக்கு திரும்பும் சத்தியமங்கலம் புலிகள் காப்பகம்!

ஈரோடு: சத்தியமங்கலம் புலிகள் காப்பக வனப்பகுதியில் தொடர்மழை பெய்ததால் பச்சைப் பசேலென அழகாக வனப்பகுதி காட்சியளிக்கிறது.

சத்தியமங்கலம் புலிகள் காப்பகத்தில் வறட்சி நீங்கியது!

By

Published : Jun 9, 2019, 7:31 PM IST

தமிழ்நாட்டில் உள்ள நான்கு புலிகள் காப்பகங்களில் சத்தியமங்கலம் புலிகள் காப்பக வனப்பகுதி அதிக பரப்பளவு கொண்ட அடர்ந்த வனப்பகுதியாகும். இதில் புலி, சிறுத்தை, யானை, கரடி, மான், காட்டெருமை, செந்நாய் உள்ளிட்ட பல்வேறு வகை வனவிலங்குகள் வசிக்கின்றன. கடந்த நான்கு மாதகாலமாக மழை பெய்யாததால் வனப்பகுதியில் கடுமையான வறட்சி ஏற்பட்டு தண்ணீர் இன்றி மரங்கள், செடிகொடிகள் என அனைத்தும் காய்ந்து போயின.

இதன் காரணமாக யானை உள்ளிட்ட வனவிலங்குகள், தீவனம், குடிநீர் தேடி வனப்பகுதியை ஒட்டியுள்ள கிராமங்களில் புகுந்து விவசாயிகள் பயிரிட்டுள்ள வாழை, கரும்பு உள்ளிட்ட பயிர்களை சேதப்படுத்தியதாக விவசாயிகள் தெரிவித்தனர்.

சத்தியமங்கலம் புலிகள் காப்பகத்தில் வறட்சி நீங்கியது!

இந்நிலையில் கடந்த இரண்டு வாரங்களாக சத்தியமங்கலம் புலிகள் காப்பக வனப்பகுதியில் மழை பெய்ததால் காய்ந்து கிடந்த மரங்கள் துளிர்விட்டு வனப்பகுதி பச்சைப்பசேலென அழகாக காட்சியளிக்கிறது. துளிர்விடும் இலை, தழைகளை யானைகள், மான்கள் ஆசனூர் சாலையோரம் முகாமிட்டு சாப்பிடுகின்றன. மழை காரணமாக வனவிலங்களுக்கு தேவையான தீவனம் மற்றும் குடிநீர் தேவை தற்காலிகமாக பூர்த்தியாகியுள்ளதாக வனத்துறை அலுவலர்கள் தெரிவித்துள்ளனர்.

ABOUT THE AUTHOR

...view details