ஈரோடு: கோபிசெட்டிபாளையம் அடுத்துள்ள நம்பியூர் சுற்றுவட்டாரப் பகுதிகளில் சில நாள்களாக மூன்று வெள்ளாடுகள், இரண்டு செம்மறி ஆடுகள் மர்ம முறையில் உயிரிழந்தன.
இதையடுத்து வனத்துறையினர் நம்பியூர் காந்திநகர் பகுதியில் சிசிடிவி கேமரா பொருத்தி கண்காணித்தபோது அதில் சிறுத்தை சாலையை கடந்து செல்வது பதிவாகியிருந்தது.
சிறுத்தை அச்சுறுத்தல் காரணமாக புதூர் அரசு தொடக்கப்பள்ளிக்கு ஊராட்சி விடுமுறை இந்நிலையில், நேற்று முன்தினம் (பிப்.4) மாலை இருகாலூர் பகுதியில் தோட்டத்தில் வேலை செய்து வந்த பெண் சிறுத்தையை பார்த்ததாக வனத்துறைக்கு தகவல் தெரிவித்தார்.
அதைத்தொடர்ந்து இருகாலூர் சுண்ணாம்புகரை, சுண்ணாம்பு காரிபாளையம் கருக்கம்பாளையம் ஆகிய இடங்களில் ஆய்வு செய்த வனத்துறையினர், சிறுத்தை நடமாட்டம் உள்ளதால் பொதுமக்கள் வெளியில் வரவேண்டாம் என எச்சரிக்கை விடுத்தனர்.
புதூர் அரசு தொடக்கப்பள்ளிக்கு ஊராட்சி விடுமுறை இதற்கிடையே நேற்று (பிப்.5) அதிகாலை கருக்கம்புதூர் கிராம சாலையில் சிறுத்தை தென்பட்டதாக வந்த தகவலையடுத்து மேலும் கருக்கம்புதூர் கிராமத்தில் எட்டு கேமராக்கள் பொருத்தும் பணியில் ஈடுபட்டுள்ளனர்.
ஏற்கனவே காந்திநகர் மற்றும் செட்டியம்பதி கிராமங்களில் 13 கேமராக்கள் பொருத்தப்பட்டு கண்காணிக்கப்பட்டு வருகின்றன. கிராமத்தையொட்டியுள்ள சுண்ணாம்புகுளம் ஏரி 12 கிலோமீட்டர் பரப்பளவு கொண்டுள்ளதால் ட்ரோன் மூலம் சிறுத்தையை தேடி வந்த நிலையில், கருக்குப்பாளையம் புதூர் அரசு தொடக்கப்பள்ளிக்கு ஊராட்சி நிர்வாகம் விடுமுறை அளிக்கப்பட்டுள்ளது.
புதூர் அரசு தொடக்கப்பள்ளிக்கு ஊராட்சி விடுமுறை இதனால் மாணவர்களின் பெற்றோருக்கு தகவல் தெரிவிக்கப்பட்டு, அவர்கள் குழந்தைகளை அழைத்துச் சென்றனர். தொடர்ந்து சிறுத்தை நடமாட்டம் காரணமாக பொதுமக்கள் யாரும் வெளிய வராத நிலையில் கருக்குபாளையம், சுண்ணாம்புக் காரை பாளையம் உள்ளிட்ட பகுதிகள் பொதுமக்கள் நடமாட்டம் இன்றி வெறிச்சோடி காணப்படுகின்றன.
மேலும், விவசாய பணிகளுக்கு செல்வோர் வீடுகளிலேயே தஞ்சம் அடைந்துள்ளதால் விவசாயப் பணிகள் பாதிக்கப்பட்டுள்ளன.
இதையும் படிங்க: 4 பேரை தாக்கிய சிறுத்தை...! தேடுதல் வேட்டையில் வனத்துறையினர்...