ஈரோடு: சத்தியமங்கலம் நகராட்சி வாரச்சந்தையில் தெருநாய்கள் அதிகளவில் உள்ளன. சந்தையில் கிடைக்கும் பொருட்களை சாப்பிட்டு அங்கு சுற்றித்திரிகின்றன. இந்நிலையில் அதிகாலை அத்தாணி சாலையில் தாயுடன் சென்ற நாய்க்குட்டி மீது அடையாளம் தெரியாத வாகனம் மோதியதில், நாய்க்குட்டி உயிரிழந்தது.
அப்போது விபத்து ஏற்படுத்திய வாகனத்தை தாய் நாய் துரத்தியது. பின்னர் நாய்க்குட்டியின் முகத்தை வேதனையுடன் முகர்ந்து பார்த்தது. அது உயிரிழந்தது தெரியவந்ததால் பாசத்தில் குட்டியை பிரிய மனமில்லாமல் அங்கேயே நின்று குரைத்துக்கொண்டிருந்தது. சிறிது தூரம் போவதும் வருவதுமாக அதன்செயல் பாிதாபமாக இருந்தது.