தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / city

குடியிருப்பு பகுதிகளில் மருத்துவக் கழிவுகள்: பொதுமக்கள் புகார் - Medical waste in residential areas

ஸ்கேன் சென்டரில் பயன்படுத்தப்படும் மருந்து, மாத்திரை, ஊசி உள்ளிட்ட மருத்துவக் கழிவுகள் சுகாதாரத் துறையின் விதிமுறைப்படி முறையாக அப்புறப்படுத்தப்படாமல் குடியிருப்பு பகுதியில் குவியல் குவியலாக கொட்டி தீவைத்து எரிக்கப்படுகிறது.

Medical waste
Medical waste

By

Published : Aug 29, 2021, 3:49 AM IST

ஈரோடு : ஈரோடு மாவட்டம் சத்தியமங்கலம் அருகே அரியப்பம்பாளையம் பகுதியில் தனியார் ஸ்கேன் சென்டர் ஒன்று செயல்பட்டு வருகிறது.

இந்த ஸ்கேன் சென்டரில் சிடி ஸ்கேன், அல்ட்ரா சவுண்ட் ஸ்கேன் உள்ளிட்ட பரிசோதனைகள் மேற்கொள்ளப்படுகின்றன.

இங்கே பரிசோதனைக்கு பயன்படுத்தப்படும் மருந்து, மாத்திரைகள், கையுறைகள், ஊசி, மருந்து குப்பிகள் உள்ளிட்ட மருத்துவக் கழிவுகள் முறையாக அகற்றப்படாமல் அப்பகுதியில் உள்ள குடியிருப்புகளின் அருகே சாலையோரம் கீழ்பவானி வாய்க்கால் களிலும் குவியல் குவியலாக கொட்டப்பட்டு அங்கு தீ வைத்து எரிக்கப்படுகிறது.

சுகாதார சீர்கேடு

இதனால் அப்பகுதியில் கறும்புகை எழுந்து சுகாதாரக்கேடு ஏற்படுவதாக அப்பகுதி பொதுமக்கள் குற்றஞ்சாட்டியுள்ளனர். இந்த ஸ்கேன் சென்டரில் பயன்படுத்தப்படும் மருந்து, மாத்திரை, ஊசி உள்ளிட்ட மருத்துவக் கழிவுகள் சுகாதாரத் துறையின் விதிமுறைப்படி முறையாக அப்புறப்படுத்தப்படாமல் இதே பகுதியில் குடியிருப்பு பகுதியில் குவியல் குவியலாக கொட்டி தீவைத்து எரிக்கப்படுகிறது.

இதன் காரணமாக இப்பகுதியில் துர்நாற்றம் வீசுவதோடு கறும்புகை காரணமாக மூச்சுத் திணறல் ஏற்பட்டு ஆஸ்துமா, அலர்ஜி உள்ளிட்ட நோய்கள் பரவ வாய்ப்பு ஏற்பட்டுள்ளது.

பொதுமக்கள் புகார்

மேலும் நேருநகர் கீழ்பவானி கிளை வாய்க்கால் மற்றும் வாய்க்கால் கரையில் மருத்துவக் கழிவுகள் கொட்டி வைக்கப்பட்டுள்ளதால் அப்பகுதியில் விளையாடும் குழந்தைகள், சிறுவர், சிறுமியர் மருந்து குப்பிகளை எடுத்து விளையாடுகின்றனர்.

அப்பகுதியில் ஆடு, மாடு உள்ளிட்ட கால்நடைகள் மேய்ச்சலில் ஈடுபடும்போது மருத்துவக் கழிவுகள் கால்நடைகளின் வயிற்றுக்குள் சென்று கால்நடைகள் உயிரிழக்கும் அபாயம் ஏற்பட்டுள்ளது.

எனவே மருத்துவக் கழிவுகளை முறையாக அகற்றாமல் குடியிருப்பு பகுதி மற்றும் கீழ்பவானி வாய்க்காலில் கொட்டி எரிக்கும் ஸ்கேன் சென்டர் மீது சம்பந்தப்பட்ட துறை அலுவலர்கள் நடவடிக்கை எடுக்க வேண்டும் என அப்பகுதி பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

இதையும் படிங்க : அரசு மருத்துவமனை வளாகத்திலேயே கொட்டப்படும் மருத்துவக் கழிவுகள்: பொதுமக்கள் அச்சம்

ABOUT THE AUTHOR

...view details