டெல்லி தாக்குதலுக்கு கண்டனம் தெரிவித்து ஈரோட்டில் நடைபெற்ற ஆர்ப்பாட்டத்தில் நூற்றுக்கும் மேற்பட்டோர் கலந்து கொண்டனர். தமிழ்நாடு முஸ்லிம் முன்னேற்றக் கழகத்தின் சார்பில், ஈரோடு கருங்கல்பாளையத்தில் ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.
காங்கிரஸ், எஸ்.டி.பி.ஐ.,மக்கள் சிவில் உரிமைக்கழகம் உள்ளிட்ட பல்வேறு அமைப்புகளைச் சேர்ந்த நூற்றுக்கும் மேற்பட்டோர் கலந்து கொண்டனர்.
இந்த ஆர்ப்பாட்டத்தின் போது டெல்லியில் நடைபெற்ற தாக்குதலுக்குக் கண்டனம் தெரிவித்து முழக்கங்கள் எழுப்பப்பட்டன. மேலும் தாக்குதலுக்கு பாஜக மற்றும் ஆர்எஸ்எஸ் அமைப்புகள்தான் காரணம் என்று குற்றஞ்சாட்டியதோடு தாக்குதலை தடுக்கத் தவறிய டெல்லி காவல் துறைக்கும் கண்டனம் தெரிவித்தனர்.