தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / city

தண்ணீரின் தேவையை உணர்த்தும் விழிப்புணர்வு பேரணி..!

ஈரோடு: கவுந்தப்பாடியில் தனியார் கலைக்கல்லூரியும், கீழ்பவானி முறைநீர் பாசன விவசாயிகள் சபையும் இணைந்து நடத்திய நீர் சேமிப்பு குறித்த விழிப்புணர்வு பேரணியில், கல்லூரி மாணவ - மாணவிகள் விவசாயிகள், சமூக ஆர்வலர்கள் என ஏராளமானோர்கள் கலந்துகொண்டு சிறப்பித்தனர்.

தண்ணீரின் தேவையை உணர்த்தும் விழிப்புணர்வுப் பேரணி

By

Published : Jun 26, 2019, 11:20 PM IST

தனியார் கலைக்கல்லூரியும், கீழ்பவானி முறைநீர் பாசன விவசாயிகள் சபையும் இணைந்து நீர் சேமிப்பு குறித்து விழிப்புணர்வு பேரணி நடத்தியது. இதில், ‘நீர் விழிப்புணர்வுள்ள சமுதாயத்தை உருவாக்க, நாமும், நம்மைச் சார்ந்தவர்களையும், ஊக்கப்படுத்துதல் வேண்டும். மேற்கூரை மழைநீர் சேமிப்பு மற்றும் சேமிப்பு முறைகளைக் கடைப்பிடிக்க ஊக்கப்படுத்துதல் வேண்டும். அவரவர் பகுதிகளில் மரம் வளர்த்தல் காடு வளர்த்தலுக்கு ஊக்கப்படுத்துதல் வேண்டும்.

பள்ளிகளில் மாணவர்களிடம் நீர் சேமிப்பு பழக்கத்தை மேற்கொள்ளவும் மேம்படுத்தவும் ஊக்கப்படுத்துதல் வேண்டும். தூய நீரைச் சேமிக்கவும் பயன்படுத்திய நீரைச் சுத்தம் செய்து தொடர்ந்து பல்வேறு வகைகளில் உபயோகிக்கவும் உரியத் திட்டங்களை ஊக்குவித்தல் வேண்டும்’ போன்ற விழிப்புணர்வு பரப்புரைகள் இடம்பெற்றன.

கல்லூரி மாணவ - மாணவிகள் விவசாயிகள், சமூக ஆர்வலர்கள் கலந்து கொண்ட தண்ணீரின் தேவையை உணர்த்தும் விழிப்புணர்வுப் பேரணி

மேலும், குழாய் இணைப்புகளில் நீர் வடியாமல் இருக்க பரிசோதித்தல் கால்வாய்களைக் கட்டுமானம் செய்தல் மற்றும் வாய்க்கால்களில் நீர் ஊடுருவி வீணாகாமல் இருக்குமாறு பார்த்துக்கொள்ளுதல் சுத்தமான நீரைச் சொட்டுநீர் தெளிப்பான்கள் மூலம் பாசனம் செய்தல், ஆகியவை விளை நிலங்களில் நீரைச் சேமிப்பதற்கான வழிமுறைகள் என்பது உட்பட பல்வேறு விழிப்புணர்வு துண்டுப் பிரசுரங்களை விநியோகித்தும், பொதுமக்களுக்கும் விவசாயிகளுக்கும் விழிப்புணர்வு ஏற்படுத்தும் விதமாக முழக்கங்கள் எழுப்பியும் பேரணியில் ஈடுபட்டனர்.

ABOUT THE AUTHOR

...view details