தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / city

லஞ்சம் வாங்கும் காவல் உதவி ஆய்வாளர்: வைரலாகும் வாட்ஸ்அப் வீடியோ! - ஈரோடு

கனரக வாகன ஓட்டுநர்களிடமிருந்து ஈரோடு மாவட்டம் சித்தோடு காவல்நிலைய உதவி ஆய்வாளர், கறாராகவும், வற்புறுத்தியும் லஞ்சம் கேட்பதும், லஞ்சப் பணத்தை தனது புல்லட் டேங் கவரில் வைக்கச் சொல்லி வற்புறுத்தும் வாட்ஸ் அப் காட்சிகள் சமூக வளைத்தளங்களில் வைரலாகப் பரவி வருகிறது.

லஞ்சம் வாங்கும் காவல் உதவி ஆய்வாளர்
லஞ்சம் வாங்கும் காவல் உதவி ஆய்வாளர்

By

Published : Nov 29, 2020, 3:59 AM IST

ஈரோடு: ஈரோடு மாவட்டம் சித்தோடு காவல்நிலைய எல்லைக்குட்பட்ட தேசிய நெடுஞ்சாலைப் பகுதி வழியாக சேலம், தர்மபுரி மாவட்டங்களைச் சேர்ந்த மாடுகள், கனரக வாகனங்கள் மூலமாக கேரளா மாநிலத்திற்கு கொண்டு செல்லப்பட்டுகிறது.

இந்த நிலையில், சித்தோடு காவல்நிலைய உதவி ஆய்வாளர் துரைராஜ், நசியனூர் அருகேயுள்ள தேசிய நெடுஞ்சாலை சாலையோர தேநீர் கடை எதிரே புல்லட் வாகனத்தை நிறுத்தி விட்டு, அங்கு அமர்ந்து வாக்கி டாக்கியில் பேசிய படி, அப்பகுதியைக் கடக்கும் மாடுகளை ஏற்றிச் செல்லும் கனரக வாகனங்களை வலுக்கட்டாயமாகத் தடுத்து நிறுத்தி, அதிகளவிலான லஞ்சத் தொகையைக் கேட்டு, அந்தத் தொகையை கடையின் எதிரே நிறுத்தப்பட்டுள்ள தனது புல்லட்டின் முன்புற கவரில் பணத்தை வைக்க சொல்லுகிறார். மறைந்திருந்து செல்போனில் மூலம் பதிவு செய்யப்பட்ட இந்த காட்சிகள் சமூக வலைத்தளங்களில் வைரலாகப் பரவி வருகிறது.

இதனிடையே உதவி ஆய்வாளர் துரைராஜ் மீது பல்வேறு புகார்களைத் தெரிவித்தும் எவ்வித நடவடிக்கையும் எடுக்காத நிலையில் சமூகவலைத்தளங்களில் பரவும் காட்சிகள் அடிப்படையில் உதவி ஆய்வாளர் மீது துறை ரீதியான நடவடிக்கை எடுத்திட வேண்டும் என்கிற கோரிக்கை வலுத்து வருகிறது.

ABOUT THE AUTHOR

...view details