+2 பொதுத்தேர்வு முடிவுகள் - தேர்ச்சி விகிதத்தில் ஈரோடு இரண்டாம் இடம்! - பன்னிரண்டாம் வகுப்பு பொதுத் தேர்வு முடிவுகள்
ஈரோடு: பன்னிரெண்டாம் வகுப்பு பொதுத்தேர்வு முடிவுகள் தேர்ச்சி விழுக்காட்டில், ஈரோடு மாவட்டத்தில் மாணவ-மாணவிகள் 96.99% தேர்ச்சியடைந்து மாநில அளவில் இரண்டாமிடத்தைப் பிடித்துள்ளனர்.
தமிழ்நாட்டில் மார்ச் மாதம் நடைபெற்ற பன்னிரெண்டாம் வகுப்பு பொதுத்தேர்வு முடிவுகள் இன்று (ஜூலை 16) வெளியிடப்பட்டன. ஈரோடு மாவட்டத்திலுள்ள 98 பள்ளிகளைச் சேர்ந்த 22 ஆயிரத்து 431 மாணவ, மாணவியர்கள் தேர்வுகளை எழுதினர்.
இதில், 21 ஆயிரத்து 755 மாணவ, மாணவியர்கள் வெற்றி பெற்று மொத்தம் 96.99 விழுக்காடு பெற்று, மாநில அளவில் இரண்டாமிடத்தைப் பிடித்துள்ளனர்.
ஈரோடு மாவட்டத்தில் பொதுத்தேர்வுகளை 10 ஆயிரத்து 489 மாணவர்கள் தேர்வெழுதியதில் 10 ஆயிரத்து 64 பேர் தேர்ச்சி பெற்றுள்ளனர். அதேபோல் 11 ஆயிரத்து 942 மாணவியர்கள் தேர்வெழுதியதில் 11 ஆயிரத்து 692 மாணவியர்கள் தேர்ச்சிப் பெற்றுள்ளனர்.
வழக்கம்போல், மாணவர்களை விடவும் மாணவியர்கள் அதிகம் தேர்ச்சி பெற்றுள்ளனர். கடந்த சில ஆண்டுகளாக, ஈரோடு மாவட்டம் தேர்ச்சி விழுக்காட்டில் மாநில அளவில் முதல் மூன்று இடங்களுக்குள் பிடித்து வருவது ஈரோடு மாவட்ட மாணவ, மாணவியர்களிடையே மகிழ்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.