ஈரோடு: ஈரோடு மாவட்டம் கோபிசெட்டிபாளையம் பிரசித்தி பெற்ற பாரியூர் கொண்டத்துக்காளியம்மன் குண்டம் தேர் திருவிழா ஒவ்வொரு ஆண்டும் ஜனவரி மாதம் கொண்டாடப்பட்டு வருகிறது. இந்தாண்டு திருவிழா கொண்டாடுவதற்கு அரசு அனுமதி மறுக்கப்பட்ட நிலையில் கோயில் நிர்வாகத்தினர் மற்றும் வீரமக்கள் திருவிழா நடத்தாமல் விடக்கூடாது என அமைச்சர் செங்கோட்டையனிடம் முறையிட்டனர்.
அமைச்சரின் பேச்சுவார்த்தைக்கு இணங்கி பக்தர்கள் இல்லாமல் திருவிழாவை நடத்திக்கொள்ள இந்து அறநிலையத்துறை அனுமதியளித்தது. அதன் அடிப்படையில் கடந்த மாதம் 24ஆம் தேதி பூச்சாட்டுதலுடன் திருவிழா தொடங்கியது. அதனைத் தொடர்ந்து இம்மாதம் 4ஆம் தேதி சந்தனக்காப்பு அலங்காரம் நடைபெற்றது. தொடர்ந்து நடந்த குண்டம் திருவிழாவில் பூசாரிகள் உள்ளிட்ட 80 பேர் மட்டுமே குண்டம் இறங்கி நேர்த்திகடன் செலுத்தினர்.
ஒவ்வொரு ஆண்டும் லட்சக்கணக்கான பக்தர்கள் குண்டம் இறங்கி நேர்திகடன் செலுத்திய நிலையில் தற்போது பக்தர்களுக்கு அனுமதி மறுக்கபட்டதால் கோயில் பூசாரிகள் மட்டுமே குண்டம் இறங்கி திருவிழாவை முடித்தனர்.