ஈரோடு மாவட்டம் சத்தியமங்கலம் வனப்பகுதியில் உள்ளது பண்ணாரி மாரியம்மன் கோயில். இந்த கோயிலுக்கு தமிழ்நாடு, கர்நாடகா மாநிலங்களிலிருந்து நாள்தோறும் ஆயிரக்கணக்கான பக்தர்கள் வந்துசெல்வார்கள். அதோபோல ஆண்டுதோறும் நடக்கும் குண்டம் விழாவில் லட்சக்கணக்கான பக்தர்கள் கலந்துகொள்வார்கள்.
இந்த குண்டம் விழா கரோனா ஊரடங்கு காரணமாக இரண்டு ஆண்டுகளாக நடத்தப்படவில்லை. தற்போது கட்டுப்பாடுகள் தளர்த்தப்பட்டதால், 14ஆம் தேதி பூச்சாட்டுதலுடன் விழா தொடங்கியது. அதைத்தொடர்ந்து இன்று குண்டம் விழா கோலாகலமாக நடத்தப்பட்டது. விழாவையொட்டி, கோயிலை சுற்றி உள்ள கிராமங்களில் பண்ணாரி அம்மன் உற்சவ ஊர்வலம் நடைபெற்றது.