தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / city

ஈரோடு மாவட்ட பள்ளி, கல்லூரிகளுக்கு உள்ளூர் விடுமுறை! - பண்ணாரி அம்மன் கோவில் திருவிழா

ஈரோடு மாவட்டத்தில், சத்தியமங்கலம் வனப்பகுதியில் உள்ள பண்ணாரி அம்மன் கோயில் திருவிழாவை முன்னிட்டு நாளை (22.03.22) பள்ளி, கல்லூரிகளுக்கு விடுமுறை அளிக்கப்பட்டுள்ளது.

ஈரோடு மாவட்ட பள்ளி கல்லூரிகளுக்கு விடுமுறை- பண்ணாரி அம்மன் கோவில் திருவிழா
ஈரோடு மாவட்ட பள்ளி கல்லூரிகளுக்கு விடுமுறை- பண்ணாரி அம்மன் கோவில் திருவிழா

By

Published : Mar 21, 2022, 4:40 PM IST

Updated : Mar 21, 2022, 4:53 PM IST

ஈரோடு:ஈரோடு மாவட்டம், சத்தியமங்கலம் வனப்பகுதியில் உள்ளது, பண்ணாரி அம்மன் ஆலயம். இதுமிகவும் பிரசித்திப்பெற்ற கோயிலாகும். இந்தக்கோயிலுக்குப் பல்வேறு பகுதிகளில் இருந்தும் அதிகமான பக்தர்கள் வருகின்றனர். இந்த ஆண்டிற்கான பண்ணாரி அம்மன் கோயில் திருவிழா கடந்த 7ஆம் தேதி தொடங்கியது.

இந்த திருவிழாவின் முக்கியநிகழ்ச்சியான பக்தர்கள் குண்டம் இறங்குதல் விழா நாளை (மார்ச்22) நடைபெறுகிறது. இந்த முக்கிய நிகழ்வை முன்னிட்டு ஈரோடு மாவட்ட பள்ளி, கல்லூரிகள் மற்றும் அரசு அலுவலகங்களுக்கு உள்ளூர் விடுமுறை அளிக்கப்பட்டுள்ளது என ஈரோடு மாவட்ட ஆட்சியர் தெரிவித்துள்ளார்.

மேலும் இந்த நாளில் தேர்வு எழுதும் மாணவர்களுக்கு விடுமுறை இல்லை எனவும் கூறியுள்ளார்.

இதையும் படிங்க:பெண்களுக்கு கல்வி தான் முக்கியம்; திருமணம் அல்ல - முதலமைச்சர் ஸ்டாலின்

Last Updated : Mar 21, 2022, 4:53 PM IST

ABOUT THE AUTHOR

...view details