தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / city

கரூர் வழியாக இயக்கப்படும் பாலக்காடு ரயில் சேவை இரண்டு நாள்கள் ரத்து - கரூர்

ஏப்.13 மற்றும் 20ஆம் தேதிகளில் (2 நாள்கள்) பாலக்காடு டவுன், திருச்சி, கரூர், திருச்சி இடையே ரயில் சேவை ரத்து செய்யப்படுகிறது.

Palakkad train service via Karur canceled Palakkad train Karur Karur latest news Karur district news பாலக்காடு ரயில் சேவை ரத்து ரயில் கரூர் கரூர் மாவட்ட செய்திகள்
Palakkad train service via Karur canceled Palakkad train Karur Karur latest news Karur district news பாலக்காடு ரயில் சேவை ரத்து ரயில் கரூர் கரூர் மாவட்ட செய்திகள்

By

Published : Apr 11, 2021, 2:51 AM IST

கரூர்: சேலம் ரயில்வே கோட்ட மக்கள் தொடர்பு அலுவலகம் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில், “திருச்சி மாவட்டம் பெட்டவாய்த்தலை, பெருகமணி ரயில் நிலையங்கள் இடையே ரயில்வே கேட் உள்ள பகுதிகளில் சப்வே கட்டும் பணிகள் மேற்கொள்ளப்படவுள்ளன.

இதனால் ஏற்படும் போக்குவரத்து நெரிசல் காரணமாக வரும் ஏப். 13ஆம் தேதி மற்றும் 20ஆம் தேதி ஆகிய இரு நாள்கள் கீழ்க்கண்ட ரயில்களின் பகுதி ரயில் சேவை ரத்து செய்யப்படுகிறது. அந்த வகையில், பாலக்காடு டவுன், திருச்சி ரயில் நிலைய சந்திப்பு சிறப்பு ரயில் (06844) கரூர் ரயில் நிலைய சந்திப்பு, திருச்சி ரயில் நிலைய சந்திப்பு இடையே ரயில்கள் இரு தினங்களுக்கு ரத்து செய்யப்படுகின்றன.
அதேபோல் திருச்சி ரயில் நிலைய சந்திப்பு, பாலக்காடு டவுன் சிறப்பு ரயில் (06843) திருச்சி ரயில் நிலைய சந்திபபு, கரூர் ரயில் நிலைய சந்திப்பு இடையே வரும் 13, 20ஆம் ஆகிய இரு தேதிகளில் ரயில்கள் ரத்து செய்யப்பட்டு கரூர் ரயில் நிலைய சந்திப்பிலிருந்து பாலக்காடு டவுனுக்கு ரயில்கள் இயக்கப்படும்” எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

ஈரோடு, திருச்சி ரயில் பாதையில், ஆங்கிலேயர் காலத்தில் கட்டப்பட்ட பழைய பாலங்களை மாற்றியமைக்கும் பணி, மின் பாதை பராமரிப்பு என அடிக்கடி ரயில் சேவைகள் நிறுத்தப்படுகின்றன என்பது குறிப்பிடத்தக்கது.

ABOUT THE AUTHOR

...view details