தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / city

சீருடை வாங்க பணமில்லாததால் ஓவியபோட்டியில் கலந்துகொண்ட சிறுமிக்கு உதவ முன்வந்த தலைவி - குழந்தைத் தொழிலாளர் ஒழிப்பு விழிப்புணர்வுக்கான ஓவியப் போட்டி

சீருடை வாங்க பணமில்லாததால் ஓவியப் போட்டியில் கலந்துகொண்டதாக தெரிவித்த ஏழை பள்ளி மாணவிக்கு சத்தியமங்கலம் நகா்மன்றத் தலைவி ஆா்.ஜானகி உதவி செய்ய முன்வந்துள்ளார்.

ஓவியப்போட்டி
ஓவியப்போட்டி

By

Published : Jun 3, 2022, 4:10 PM IST

ஈரோடு மாவட்டத்தில் அதிக மலைக்கிராமங்கள் உள்ளன. இங்குள்ள பல குழந்தைகள் போதிய வசதி இல்லாமல் பள்ளி படிப்பை பாதியிலேயே நிறுத்திவிடுகின்றனர். இதனை தடுக்கும் நோக்குடன் சத்தியமங்கலத்தில் உள்ள ரீடு நிறுவனம் சார்பில் கட்டாய கல்வி உரிமையை பெறுதல், குழந்தை தொழிலாளர் நிலையை போக்குதல் உள்ளிட்டவை குறித்த ஒவியப்போட்டி நேற்று (ஜுன் 2) நடைபெற்றது.

குழந்தைத் தொழிலாளர் ஒழிப்பு விழிப்புணர்வுக்கான ஓவியப் போட்டி

இந்த போட்டியில் சத்தியமங்கலம் சுற்றுவட்டாரத்தில் இருந்து 250 பள்ளி மாணவிகள் பங்கேற்று ஒவியங்களை வரைந்தனர். சிறப்பு விருந்தினராக சத்தியமங்கலம்நகர்மன்றத் தலைவர் ஜானகி கலந்துகொண்டார்.அதிலொரு மாணவி, சீருடை வாங்க பணமில்லாததால் பள்ளிக்கு செல்லமுடியாத நிலை ஏற்பட்டதாகவும், ஒவிய போட்டியில் கிடைக்கும் பரிசுத்தொகையை வைத்து சீருடை வாங்கப்போவதாகவும் தெரிவித்தார். இதனைக்கேட்ட ஜானகி, சீறுடைக்கான செலவை தான் ஏற்பதாக தெரிவித்தார்.

இதையும் படிங்க:வெறும் கால்களுடன் 5 கி.மீ. ஓடி முதல்பரிசாக 1 லட்சம் வென்ற பெண் விவசாயி!

For All Latest Updates

ABOUT THE AUTHOR

...view details