தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / city

ஈரோட்டில் கரோனா தொற்றால் ஒருவர் உயிரிழப்பு - Erode district

ஈரோடு: கரோனா நோய்த் தொற்று உறுதி செய்யப்பட்டு, பெருந்துறை கரோனா சிறப்பு மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்த 58 வயது நபர் சிகிச்சை பலனின்றி பரிதாபமாக உயிரிழந்தார்.

One person died
One person died

By

Published : Jun 27, 2020, 7:16 PM IST

Updated : Jun 27, 2020, 7:33 PM IST

ஈரோடு மாவட்டம் முழுவதும் கடந்த சில நாள்களாக கரோனா நோய்த்தொற்று உறுதி செய்யப்பட்டு, 30க்கும் மேற்பட்டவர்கள் பெருந்துறை கரோனா சிறப்பு மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகின்றனர்.

இந்த நிலையில் ஈரோடு மாநகராட்சிக்குள்பட்ட திருநகர் காலனிப் பகுதியைச் சேர்ந்த தம்பதி திருப்பூருக்குச் சென்று வந்ததில் உடல்நலக்கோளாறு ஏற்பட்டதால் சிகிச்சை மேற்கொண்டுள்ளனர்.

பின்னர், இருவருக்கும் கரோனா நோய்த்தொற்று உறுதி செய்யப்பட்டு பெருந்துறை கரோனா சிறப்பு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வந்தனர். இதனிடையே 58 வயதுடைய கணவர், மருத்துவமனையில் வழங்கப்பட்ட சிகிச்சை பலனின்றி இன்று (ஜூன் 27) காலை உயிரிழந்தார்.

இந்நிலையில் ஈரோடு மாவட்டத்தில் கரோனா நோய்த்தொற்று உறுதி செய்யப்பட்டு சிகிச்சை பலனின்றி உயிரிழந்தோர் எண்ணிக்கை மூன்றாக உயர்ந்துள்ளது.

Last Updated : Jun 27, 2020, 7:33 PM IST

ABOUT THE AUTHOR

...view details