ஈரோடு:சத்தியமங்கலம் அருகே புதுக்கொத்துக்காட்டையைச் சேர்ந்த 16 கட்டிடத்தொழிலாளர்கள் டெம்போவில் ராஜன்நகரில் புதுமனை புகுவிழாயையொட்டி நடந்த கிடா விருந்துக்கு சென்றனர். விருந்துக்கு பின் அவர்கள் மீண்டும் சத்தியமங்கலம் நோக்கி திரும்பியபோது, தாண்டாம்பாளையம் என்ற இடத்தில் கட்டுப்பாட்டை இழந்து சாலையில் கவிழ்ந்து சாலையோரம் நின்ற ஆம்னி மீது மோதி நின்றது.
இந்த விபத்தில் லாரியில் இருந்த 17 பேரும் பலத்த காயமடைந்தனர். டெம்போவுக்கு அடியில் சிக்கிக்கொண்ட கவிதா என்ற பெண் தொழிலாளி சம்பவ இடத்திலேயே பரிதாபமாக உயிரிழந்தார். இதில் 10 பெண்கள் உட்பட 16 பேரும் மீட்கப்பட்டு ஆம்புலன்ஸ் மூலம் சத்தியமங்கலம் அரசு மருத்துவமனையில் சேர்க்கப்பட்டனர்.