ஈரோடு: கடந்த வருடம் டிசம்பர் மாதம் கோபிசெட்டிபாளையத்தில் நடைபெற்ற திருமணம் ஒன்றில் அங்கிருந்த பெண்ணிடமிருந்து ரூ.5,000 திருடு போனது. .
கைது
இதுதொடர்பாக அப்பெண் அளித்த புகாரின் பேரில் வழக்குப் பதிவு செய்து கொள்ளையனை தேடி வந்த காவல்துறையினர், கடந்த சில தினங்களுக்கு முன்பு பணம் கொள்ளையடிக்கப்பட்ட வழக்கில் கரூர் மாவட்டம் பெருச்சிபாளையத்தை சேர்ந்த ஆறுமுகம் (எ) ராஜா என்பவரை கைது செய்தனர்.
தொடர்ந்து இந்த வழக்கு குறித்து ஆறுமுகம் (எ) ராஜாவிடம் விசாரணை மேற்கொண்ட போது இவர் கரூர், பசுவபட்டி, வெங்கமேடு, அவிநாசி, கோவை, பெருந்துறை, சக்தி, மற்றும் கோபி ஆகிய காவல் நிலையங்களில் மொத்தம் 41 திருட்டு வழக்குகளில் தொடர்புடையவர் என்பது தெரியவந்தது.