ஈரோடு: பண்ணாரி சோதனைச்சாவடியில் அலுவலர்கள் கையூட்டு வாங்கும் கண்காணிப்பு படக்கருவியின் காட்சிகள் தற்போது வெளியாகி பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
தமிழ்நாடு, கர்நாடகா இடையே பயணிக்கும் சரக்கு வாகங்கள் பண்ணாரி சோதனைச்சாவடி வழியாக பயணிக்கும். தினம்தோறும் ஆயிரக்கணக்கான வாகனங்கள் செல்லும் இந்த சோதனைச்சாவடியில் வட்டார வாகன போக்குவரத்து அலுவலகம் செயல்படுகிறது.
சாத்தான்குளம் காவல்நிலையத்தில் என் மகனையும் சித்ரவதை செய்தே கொன்றனர்: உயர் நீதிமன்ற மதுரை கிளையில் புதிய மனு...!
அத்தியாவசிய வாகனங்களின் ஆவணங்களை வட்டார போக்குவரத்து அலுவல ஊழியர்கள் சரி பார்த்து சீல் வைத்து அனுப்புவர். இவ்வேளையில் வட்டார போக்குவரத்து அலுவலகத்தில் உள்ள பெண் போக்குவரத்து ஆய்வாளரும், உதவியாளர்களும் லாரி ஓட்டுநர்களிடம் காப்பீடு, மாசில்லா சான்றிதழ், ஓட்டுநர் உரிமம் ஆகிய உரிய ஆவணங்கள் சரிபார்ப்பர்.
சோதனைச் சாவடியில் கையூட்டு வாங்கும் அலுவலர்கள் குறித்த சிசிடிவி பதிவுக் காட்சிகள் ஆனால், சரியான ஆவணங்கள் இருந்தாலும், அரசு அலுவலர்கள் கையூட்டு வாங்குவதாக புகார்கள் எழுந்தவண்ணம் இருந்தன. இதனிடையே அலுவலர்கள் கையூட்டு வாங்கும் காணொலி வெகுவாக இணையத்தில் பரவிவருகிறது.