ஈரோடு:ஈரோடு மாணிக்கம்பாளையம் ஹவுசிங் யூனிட் பகுதியில் இஸ்லாமியர் வசிக்கும் வீட்டில் நேற்று (ஜூலை 26)மாலை என்ஐஏ அதிகாரிகள் அதிரடியாக உள்ளே நுழைந்து வீட்டிலிருந்த 5 பேரிடம் விசாரணை நடத்தினர். இதில் ஒருவரை மட்டும் வேறு இடத்திற்கு அழைத்துச் சென்று விசாரணை நடத்தினர். என்.ஐ.ஏ. அதிகாரிகள் தொடர்ந்து சோதனை நடத்தி வீட்டிலிருந்த தகவல் தொடர்புக்குப் பயன்படுத்தப்பட்டு ஸ்மார்ட் போன், லேப்டாப், டைரிகள், சிம்கார்டுகள், வங்கி பாஸ் புக் உள்ளிட்ட ஆவணங்களைக் கைப்பற்றினர்.
இதனையடுத்து அப்பகுதியில் பலத்த பாதுகாப்பு போடப்பட்டிருந்தது. இதனால் பிரதமர் நரேந்திர மோடி செஸ் ஒலிம்பியாட் போட்டியைத் துவக்கி வைக்கத் தமிழ்நாடு வர உள்ள நிலையில் என்.ஐ.ஏ. குழுவினர் ஈரோட்டில் அதிரடி சோதனையில் ஈடுபட்டுள்ளனர்.