ஈரோடு மாவட்டம் ராயர்பாளையத்தைச் சேர்ந்த குழந்தைவேலுவின் மகன் பொன்னுசாமி(23). இவர் திருப்பூரில் உள்ள பனியன் கம்பெனியில் வேலை செய்து வந்தார்.
முயல் வேட்டைக்குச் சென்றவர் மின்சாரம் தாக்கி பலி! - rabbit hunting
ஈரோடு: புலவபாளையம் பகுதியில் முயல் வேட்டைக்குச் சென்ற ஒருவர் மின்சாரம் தாக்கி சம்பவ இடத்திலே பரிதாபமாக உயிரிழந்துள்ளார்.
நேற்று புலவபாளையம் பகுதியில் அவர் முயல் வேட்டைக்குச் சென்றுள்ளார்.அங்கு ஒரு முயலைக் கண்டு அதை பிடிக்கத் துரத்தியபோது அது அருகில் இருந்த ஆலை அருகே பதுங்கியது. முயலைப் பிடிக்கும் ஆர்வத்தில் அவர் அங்கிருந்த மதில் சுவரைத் தாண்ட முயற்சித்தபோது சுவரின் மேல் இருந்த கேபிள் ஒயரில் அவருடைய கால் சிக்கிக் கொண்டது. கீழே விழாமல் இருப்பதற்காக அவர் சுவரின் மேல் இருந்த மின்சார கம்பியை எதிர்பாராதவிதமாக தொட்டதில், மின்சாரம் தாக்கி உடல் கருகி உயிரிழந்தார்.
இதுபற்றி அறிந்த நம்பியூர் கவால்துறையினர் சம்பவ இடத்துக்கு வந்து பொன்னுசாமியின் உடலை கைப்பற்றி உடற்கூறாய்வுக்காக அரசு மருத்துவமனைக்கு அனுப்பிவைத்தனர்.