ஈரோடுமாவட்டம் கோபிசெட்டிபாளையம் அருகேயுள்ள நஞ்சைகோபி கிராமத்தில் லலிதா கிராம நிர்வாக அலுவலராக பணியாற்றிவருகிறார். இவர் அலுவலகத்தில் பணியில் இருந்தபோது அதே பகுதியைச் சேர்ந்த மூர்த்தி என்பவர் குடிபோதையில் கிராம நிர்வாக அலுவலகத்திற்குள் நுழைந்து லலிதாவிடம் புளியங்காய் பறிப்பதற்கான ஏலம் எப்பொழுது விடப்போகறீர்கள் என்று ஒருமையில் பேசியுள்ளார்.
அதற்கு கிராம நிர்வாக அலுவலர் முறையாக தண்டோரா மூலம் அறிவிப்பு செய்யப்படும், அப்போழுது வந்து ஏலம் எடுத்துக்கொள்ளுங்கள் என்று தெரிவித்துள்ளார். இதனால் ஆத்திரமடைந்த அவர் மூர்த்தி புளியங்காய்கள் மரத்திருந்து விழுந்து வீணாகிறது என்று கூறி கிராம நிர்வாக அலுவலரின் மேஜையின் மீதிருந்து கிராம வரைபடம் அடங்கிய ஆவண புத்தகத்தை கிழிந்தெறிந்து விட்டு வெளியில் வந்தவர், கையில் வைத்திருந்த மண் வெட்டியால் அலுவலக ஐன்னல் கதவை உடைத்துள்ளார்.
இதனால் அதிர்ச்சியடைந்த கிராம நிர்வாக அலுவலர் வெளியே வந்து போதை ஆசாமி மூர்த்தியிடம் ஏன் இவ்வாறு அநாகரிகமாக நடந்துகொள்கறீர்கள் என்று கேட்டபோது கையில் வைத்திருந்த கத்தியைக்காட்டி கொலை செய்துவிடுவதாகவும், தாகாத வார்த்தைகளால் திட்டியதாகவும் கிராம நிர்வாக அலுவலர் மற்றும் பக்கத்திலிருந்த பொதுமக்கள் தெரிவித்தனர்.
ஏலம் கேட்டு கிராம நிர்வாக அலுவலருக்கு கொலை மிரட்டல் விடுத்தவர் குறித்து பொதுமக்களின் கருத்து அருகில் இருந்த பொதுமக்கள் நியாயம் கேட்டபோது அவர்களையும் மூர்த்தி தகாத வார்த்தைகளால் திட்டியுள்ளார். அதனைத் தொடர்ந்து கிராம நிர்வாக அலவலர் லலிதா கோபிசெட்டிபாளையம் காவல் நிலையத்திற்கு தகவல் தெரிவித்ததையடுத்து சம்பவ இடத்திற்கு விரைந்து வந்த காவல் துறையினர் விசாரணை மேற்கொண்டனர்.
அப்போது மூர்த்தி கிராமத்திலிருந்த ஒருவரின் இருச்சக்கர வாகனத்தில் ஏறி தப்பியோடியுள்ளார். அவரை பிடிப்பதற்கு காவல் துறையினர் முயற்சி மேற்கொண்டுள்ளனர்.