தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / city

மாணவர்கள் நாட்டிற்கு சேவை செய்ய வேண்டும்: ஆ.ராசா - Erode district news

போட்டித் தேர்வுகளில் மாணவர்கள் கலந்துகொண்டு வெற்றி பெற்று அரசு அதிகாரிகளாக தேர்வாகி நாட்டிற்கு சேவை செய்ய வேண்டும் என நீலகிரி நாடாளுமன்ற உறுப்பினர் ஆ.ராசா தெரிவித்தார்.

அடிக்கல் நாட்டு விழா
அடிக்கல் நாட்டு விழா

By

Published : May 16, 2022, 7:21 AM IST

ஈரோடு: சத்தியமங்கலம் அருகே உள்ள புஞ்சை புளியம்பட்டி நகராட்சியில் பல்வேறு வளர்ச்சித் திட்டப் பணிகளுக்கு அடிக்கல் நாட்டு விழாவில் திமுக துணைப் பொதுச் செயலாளரும், நீலகிரி நாடாளுமன்ற உறுப்பினருமான ஆ.ராசா கலந்து கொண்டார்.

இதைத் தொடர்ந்து புஞ்சை புளியம்பட்டியில் திமுக சார்பில் நடத்தப்படும் டிஎன்பிஎஸ்சி போட்டித் தேர்வுக்கான பயிற்சி வகுப்பில் பங்கேற்ற மாணவர்களிடம் ஆ.ராசா கலந்துரையாடினார்.

அடிக்கல் நாட்டு விழா

அப்போது அவர், "போட்டித் தேர்வுகளில் மாணவர்கள் கலந்துகொண்டு வெற்றி பெற்று அரசு அதிகாரிகளாக தேர்வாகி நாட்டிற்கு சேவை செய்ய வேண்டும்.

நீலகிரி நாடாளுமன்ற தொகுதிக்குட்பட்ட பகுதிகளில் போட்டித் தேர்வில் வெற்றி பெறும் மாணவர்களுக்கு டெல்லிக்கு வரும் பயணச் செலவை நானே ஏற்கிறேன்" என்றார்.

இதையும் படிங்க:Video: கோத்தகரியில் ஆட்டம் பாட்டத்துடன் அரங்கேறிய படுகர் தின விழா

For All Latest Updates

ABOUT THE AUTHOR

...view details