ஈரோடு:மொடக்குறிச்சி அடுத்த சேமூரை சேர்ந்தவர் ரவிக்குமார்-கோமதி தம்பதி். கோமதி தனது 4 வயது மகளுடன் மொடக்குறிச்சியிலுள்ள தாயார் வீட்டுக்கு நேற்று (ஜூன் 12) இருசக்கர வாகனத்தில் சென்று கொண்டிருந்தார். அப்போது ஆவராங்காட்டு வலசில் முன்னாடி சென்ற டிராக்டர் ஒன்றை கடக்க முயன்றுள்ளார்.
அப்போது திடீரென எதிரே வந்த மற்றொரு இருசக்கர வாகனம் ஒன்றின்மீது மோதியதில் நிலை தடுமாறி கீழே விழுந்தார். இதனால், அருகே வந்த டிராக்டர் சக்கரத்தில் சிக்கி கோமதியும் அவரது மகள் சுகுதியும் சம்பவம் இடத்திலேயே உயிரிழந்தனர்.