ஈரோடு: சத்தியமங்கலம் புலிகள் காப்பகத்தில் உள்ள மல்லியம் துர்கம் மலைக்கிராமம் கடல்மட்டத்தில் இருந்து 1,100 மீட்டர் உயரத்தில் உள்ளது. அடர்ந்த காட்டுப்பாதையில் செங்குத்தான உயரமுள்ள இக்கிராமத்தில் 300 பேர் வசித்து வருகின்றனர். பழங்குடியின பொருளாதாரத்தில் பின்தங்கிய இப்பகுதி மக்கள், ரேஷன் பொருள்கள் வாங்க 15 கி.மீ தூரமுள்ள கடம்பூர் மலைப்பகுதிக்கு வரவேண்டும்.
இது குறித்து மலைவாழ் மக்கள் மாவட்ட ஆட்சியருக்கு மனு அளித்தனர். இதையடுத்து நடமாடும் ரேஷன் கடை அமைக்க அவர் உத்தரவிட்டார்.
இதையடுத்து மக்கள் நலன் கருத்தி இருட்டிபாளையம் தொடக்க வேளாண்மை கூட்டுறவு சங்கம் மூலம் நடமாடும் கூட்டுறவு அங்காடி அமைப்பதற்கு அதன் தலைவர் ஐஆர் பசுவராஜ் ஏற்பாடு செய்தார்.