ஈரோடு மாவட்டம் சத்தியமங்கலம் அருகே உள்ள கெம்பநாயக்கன்பாளையம் பகுதியைச் சேர்ந்தவர் வெங்கிட்டம்மாள், 75 வயது மூதாட்டியான இவர் கடந்த இரண்டு தினங்களுக்கு முன்பு காணாமல் போனதையடுத்து அவரது குடும்பத்தினர் சுற்றுவட்டார பகுதி மற்றும் உறவினர்கள் வீட்டில் தேடி வந்தனர்.
இந்நிலையில் இன்று சத்தியமங்கலம் சித்தி விநாயகர் கோயில் படித்துறை அருகே பவானி ஆற்றில் துணி துவைத்துக் கொண்டிருந்த பெண்கள் வயதான மூதாட்டியின் உடல் நீரில் மிதந்ததை கண்டதும் சத்தியமங்கலம் காவல் துறையினருக்கு தகவல் தெரிவித்தனர். சம்பவ இடத்திற்கு சென்ற சத்தியமங்கலம் காவல் துறையினர் 2 நாட்களுக்கு முன்பு காணாமல் போன வெங்கிட்டம்மாளின் சடலம் என்பது தெரிய வந்ததையடுத்து அவரது குடும்பத்தாருக்கு தகவல் தெரிவித்தனர்.