ஈரோடு மாவட்டம் கோபிசெட்டிப்பாளையம் தொகுதியில், கூட்டணி சார்பில் போட்டியிடும் மணிமாறனை ஆதரித்து, திமுக மகளிரணிச் செயலாளர் கனிமொழி கோபி பேருந்து நிலையத்தில் பரப்புரை மேற்கொண்டார். அப்போது பேசிய அவர், “கடந்த பத்து ஆண்டுகளாக இந்த ஆட்சியில் பெண்களுக்கு என்ன செய்திருக்கிறார்கள் என்பதை எண்ணிப் பாருங்கள். பொள்ளாச்சி கொடூர நிகழ்வில் குற்றவாளிகள் இன்று வரை தண்டிக்கப்படவில்லை. பெண்கள் சுயமரியாதை பறிக்கப்பட்டுள்ளது. பெண் போலீஸ் அதிகாரிக்கே பாதுகாப்பில்லை.
துறையே தெரியாத அமைச்சர் செங்கோட்டையன்! - கனிமொழி - கோபிசெட்டிப்பாளையம் தொகுதி
ஈரோடு: தமிழ்நாட்டின் சுயமரியாதையை மீட்டெடுக்க திமுக ஆட்சிக்கு வரவேண்டும் என அக்கட்சியின் மகளிரணிச் செயலாளர் கனிமொழி கோபிசெட்டிப்பாளையம் பிரச்சாரத்தில் கூறியுள்ளார்.
பள்ளிக்கல்வித்துறை போல குழப்பமான ஒரு அமைச்சகம் வேறு எதுவாகவுமே இருக்க முடியாது. அந்தளவிற்கு தனது துறையே தெரியாத அமைச்சர்தான் செங்கோட்டையன். காலையில் ஒரு அறிவிப்பு, மதியம் ஒரு அறிவிப்பு. ஆகவே, மக்களுக்கு பயனில்லாத ஆட்சிதான் அதிமுக ஆட்சி. தமிழ்நாட்டை இங்கிருந்துதான் ஆள வேண்டும். டெல்லியிலிருந்து யாரோ ஆளக் கூடாது. எனவேதான் தமிழ்நாட்டின் சுயமரியாதையை மீட்டெடுக்க திமுக ஆட்சிக்கு வரவேண்டும்” என்றார்.
இதையும் படிங்க: மதுவிலக்கு, ஏழு தமிழர் விடுதலை - சிபிஐஎம் தேர்தல் அறிக்கையின் முக்கிய அம்சங்கள்