பள்ளிக் கல்வித் துறை அமைச்சர் செங்கோட்டையன் ஈரோடு மாவட்டத்தில் செய்தியாளர்களைச் சந்தித்தார். அப்போது அவர் பேசுகையில், “தமிழ்நாடு வியக்கத்தக்க அளவுக்கு முதலமைச்சர் நல்ல ஆட்சியை வழங்கிவருகிறார்.
அரசு, அரசு உதவிபெறும் பள்ளிகளுக்கு அரையாண்டு தேர்வு ரத்து தமிழ்நாட்டில் விளையாட்டுகளை ஊக்கப்படுத்தும்விதமாக அனைத்து ஊராட்சிகளுக்கும் நிதிகள் வழங்கப்பட்டுள்ளன. குறிப்பாக ஊராட்சி, பேரூராட்சிகளில் விளையாட்டுகளை ஊக்குவிக்க 67 கோடி ரூபாய் நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது.
அரையாண்டு தேர்வைப் பொறுத்தவரையில், அரசு மற்றும் அரசு உதவிபெறும் பள்ளிகளில் தேர்வு ரத்து செய்யப்பட்டுள்ளது. தனியார் பள்ளிகள் வேண்டுமானால் ஆன்னலைனில் தேர்வு வைத்துக்கொள்ளலாம்.
பாடத்திட்டங்களைப் பொறுத்தவரையில் 9ஆம் வகுப்பு வரையில் 50 விழுக்காடும் 10, 11, 12ஆம் வகுப்புகளில் 65 விழுக்காடு பாடத்திட்டங்கள் வைக்கப்படுகின்றன. பள்ளிகளில் கழிப்பறை வசதி இல்லாமல் இல்லை. ஆனால் மாணவர்களின் எண்ணிக்கை அதிகரித்துள்ளது.
அதனால் கூடுதல் கழிப்பறைகள் தேவைப்படுகின்றன. படிப்படியாக கட்டிக்கொடுக்கப்படுகிறது. பள்ளிகள் திறப்பு குறித்து கல்வியாளர்கள், பெற்றோர்கள் மத்தியில் கலந்து ஆலோசித்த பிறகு முடிவுசெய்யப்படும்” என அவர் தெரிவித்தார்.
இதையும் படிங்க:வாடகை பாக்கி விவகாரம்: லதா ரஜினிகாந்துக்கு உயர் நீதிமன்றம் எச்சரிக்கை!