தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / city

செங்கோட்டையனின் சொத்து மதிப்பு சுமார் 10 கோடி ரூபாய்: வேட்புமனுவில் தகவல் - Minister Sengottaiyan Property value

ஈரோடு: அமைச்சர் செங்கோட்டையன் கோபிசெட்டிபாளையம் சட்டப்பேரவைத் தொகுதியில் போட்டியிட தாக்கல்செய்த வேட்புமனுவில், அமைச்சரின் சொத்து மதிப்பு ஒன்பது கோடியே 80 லட்சத்து 96 ஆயிரம் ரூபாய் எனக் குறிப்பிடப்பட்டுள்ளது.

அமைச்சர் செங்கோட்டையன்
அமைச்சர் செங்கோட்டையன்

By

Published : Mar 15, 2021, 10:50 PM IST

கோபிசெட்டிபாளையம் சட்டப்பேரவைத் தொகுதியில் அதிமுக கட்சியின் சார்பில் போட்டியிடும் வேட்பாளர் அமைச்சர் கே.ஏ. செங்கோட்டையன் அப்பகுதியின் கோட்டாட்சியர் அலுவலகத்தில் தேர்தல் நடத்தும் அலுவலரான பழனிதேவியிடம் பத்தாவது முறையாக வேட்புமனு தாக்கல்செய்து உறுதிமொழி ஏற்றுக்கொண்டார்.

முன்னாக கோபிசெட்டிபாளையம் ஒன்றியத்தில் தேர்தல் பணிக்காகக் கட்சி பணிமனையை அமைச்சர் செங்கோட்டையன் திறந்துவைத்து பேருந்து நிலையம் பகுதியிலிருந்து ஆயிரத்திற்கும் மேற்பட்ட தொண்டர்களுடன் கச்சேரிமேடு வரை ஊர்வலமாகச் சென்று கோட்டாட்சியர் அலுவலகத்தில் வேட்புமனு தாக்கல்செய்தார்.
அதன்பின்னர் செய்தியாளர்களைச் சந்தித்த அமைச்சர் செங்கோட்டையன், 234 தொகுதிகளிலும் அதிமுக வெற்றிபெறும் எனவும் நல்லாட்சி தமிழ்நாட்டில் மலர்வதற்கு முதலமைச்சரின் ஆணையை ஏற்று அயராது உயிரைப் பணயம்வைத்து உழைக்கத் தயாராக உள்ளதாகவும் தெரிவித்தார்.


அமைச்சர் இன்று (மார்ச் 16) வேட்புமனு தாக்கல்செய்ததில், அசையும் சொத்துகளின் மதிப்பு ரூ.5,68,46,017. அசையா சொத்துகளின் மதிப்பு ரூ.4,12,50,000 சோ்ந்து மொத்தமாக ரூ.9,80,96,017 என வேட்புமனுவில் குறிப்பிடப்பட்டுள்ளது.

இதையும் படிங்க: தேர்தல் 2021: கவர்ச்சி அறிவிப்புகள் - பெண்களுக்கு வரமா, பாரமா?

ABOUT THE AUTHOR

...view details