ஈரோடு: கோபிசெட்டிபாளையம் டி.ஜி. புதூரில் நடைபெற்ற நிகழ்ச்சியில் பள்ளிக்கல்வித் துறை அமைச்சர் செங்கோட்டையன் பங்கேற்று நலத்திட்ட உதவிகளை வழங்கினார். அப்போது ஆரம்பக் கல்வி முதல் 12ஆம் வகுப்பு வரை கியூஆர் குறியீட்டின் மூலம் பாடங்களைக் கைபேசிகளில் பதிவிறக்கம் செய்து, படிப்பது எவ்வாறு என்ற மாணவ, மாணவிகளுக்கு செயல்முறை பயிற்சியைத் தொடங்கிவைத்தார்.
அதன்பின் செய்தியாளர்களிடம் பேசிய அவர், “தனியார் பள்ளிகள் கட்டணம் வசூலிப்பது குறித்த நீதிமன்றத்தில் தீர்ப்பு வழங்கப்பட்டுள்ளது. அதன்படி தற்காலிகமாக 2 ஆயிரம் பள்ளிகள் கட்டணம் வசூலிக்க அனுமதியில்லை.
பிரித்தாளும் சூழ்ச்சியால் தமிழர் மீது எந்தச் சாயமும் பூச முடியாது - கமல்ஹாசன் ட்வீட்
விளாங்கோம்பை மலைவாழ் மக்கள் கிராமத்தில் உள்ள குழந்தைகள் 19 நபர்களுக்கு பழங்குடியின சாதிச் சான்றிதழ்கள் இன்று வழங்கப்பட்டுள்ளன. அடுத்தாண்டு ஆயிரம் பள்ளிகளுக்கு இருக்கைகள் வழங்க தனியார் தொண்டு நிறுவனங்கள் முன்வந்துள்ளன. அரசின் சார்பில் 6 ஆயிரத்து 19 பள்ளிகளில் கணினிகள் பொருத்தப்பட்டு, இணையதள வசதி ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.
பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் செங்கோட்டையன் பேட்டி இரண்டு ஆண்டுகளில் மாணவர்கள் கைபேசி, கணினி வழியாகப் பாடங்களைப் பதிவிறக்கம் செய்து படிக்கும் நிலை உருவாக்கப்படும். 12ஆம் வகுப்பு பொதுத்தேர்வில் எஞ்சியுள்ள தேர்வு 27ஆம் தேதி நடைபெறும். தேர்வு எழுதும் மாணவர்களுக்கு மாத இறுதியில் முடிவுகள் வெளியிடப்படும்” என்றார்.