சத்தியமங்கலம் காப்பகம் ஆசனூர் வனச்சரகத்தில் ஏராளமான புள்ளிமான்கள் உள்ளன. இங்கு அதிகளவில் வனவிலங்குகள் வேட்டையாடப்படுவதால் அதனை தடுப்பதற்காக, வனத்துறையினர் ரோந்துப் பணியில் ஈடுபட்டிருந்தனர். அப்போது சந்தேகப்படு்மபடியாக வனத்தில் திரிந்த நபரை பிடித்து அவர்கள் விசாரித்தனர். ஆனால் அவர் முன்னுக்கு பின் பதிலளித்ததால், அவர் வைத்திருந்த பையை சோதனை செய்த போது வனவிலங்குகளை வேட்டையாட பயன்படுத்தப்படும் சுருக்குக் கம்பி இருந்தது.
வனப்பகுதியில் மான் வேட்டையாட முயன்றவர் கைது! - வனப்பகுதி
ஈரோடு: ஆசனூர் வனப்பகுதியில் மான் வேட்டையாட முயன்ற கர்நாடக மாநிலத்தை சேர்ந்தவரை வனத்துறையினர் கைது செய்துள்ளனர்.
arrest
விசாரணையில் அவர் கர்நாடக மாநிலம் எத்தேகவுடன் தொட்டி பகுதியைச் சேர்ந்த ருத்ரா (25) என்பதும், வனப்பகுதியில் மான் வேட்டையாட முயன்றதும் தெரியவந்தது. பின்னர் அவரிடமிருந்து வேட்டையாடுவதற்கு பயன்படுத்தப்பட்ட கண்ணி, டார்ச் லைட் ஆகியவற்றை பறிமுதல் செய்த வனத்துறையினர், அவரை கைது செய்து சத்தியமங்கலம் மாஜிஸ்ட்ரேட் முன்பு ஆஜர்படுத்தி கோபி சிறையில் அடைத்தனர்.
இதையும் படிங்க: பிராய்லர் கோழிகளின் தரத்தை மேம்படுத்த வியாபாரிகள் கோரிக்கை...!