ஈரோடு அருகே கஸ்பாபேட்டையில் தனியாருக்குச் சொந்தமான ஆதரவற்ற குழந்தைகள் காப்பகம் செயல்பட்டு வருகிறது. இங்கு ஓட்டுனராக பணியாற்றி வருபவர் பசுபதி. இவர் காப்பகத்தில் உள்ள சிறுமியை பாலியல் வன்புணர்வு செய்ததாகக் குற்றம்சாட்டப்படுகிறது.
இது தொடர்பாக காப்பக நிர்வாகி அளித்த புகாரின் அடிப்படையில் வழக்குப்பதிவு செய்த ஈரோடு அனைத்து மகளிர் காவல்துறையினர் பசுபதியை போக்சோ சட்டத்தில் கைது செய்து சிறையில் அடைத்தனர்.