ஈரோடு: ஈரோடு மாவட்டம் சத்தியமங்கலம் வனச்சரகத்திற்கு உட்பட்ட பகுதிகளில் ஏராளமான யானைகள் வாழ்ந்துவருகின்றன. தற்போது அப்பகுதியில் ஏற்பட்டுள்ள வறட்சி காரணமாக வனவிலங்குகளுக்கு உணவு, குடிநீர் தட்டுப்பாடு ஏற்பட்டுள்ளது.
மூங்கில் தூறுக்காக முகாமிட்டுள்ள யானை - Elephanta around in aasanur forest road
சத்தியமங்கலம் வனச்சரகத்திற்கு உட்பட்ட சாலையோரங்களில் சரிந்து விழுந்துள்ள மூங்கில் மரங்களின் தூறினை சாப்பிட யானை ஒன்று முகாமிட்டுள்ளது.
சத்தியமங்கலம் யானை
இந்நிலையில், செவ்வாய்க்கிழமை அன்று ஆசனூரில் வீசிய பலத்த சூறைக்காற்றால் தமிழ்நாடு-கர்நாடக தேசிய நெடுஞ்சாலை ஓரத்தில் உள்ள மூங்கில் மரங்கள் சாயந்தன. இதனால் போக்குவரத்து கடுமையாக பாதிக்கப்பட்டது.
பின்பு சாலையின் குறுக்கே கிடந்த மூங்கில்களை வனத்துறையினர் அப்புறப்படுத்தி ஓரமாக போட்டனர். இந்நிலையில் அந்த மூங்கில் மரங்களின் தூறினைச் சாப்பிட ஒற்றை ஆண் யானை அப்பகுதியில் முகாமிட்டுள்ளது. இதனால் வாகன ஓட்டிகள் அச்சத்தில் உள்ளனர்.