ஈரோடு:திம்பம் மலைப்பாதை ஈரோடு மாவட்டம் சத்தியமங்கலம் வழியாக தமிழ்நாடு-கர்நாடக மாநிலங்களை இணைக்கும் முக்கிய சாலையாகும். இந்த சாலை சத்தியமங்கலம் புலிகள் காப்பகத்தில் அமைந்துள்ளது. இதில் 27 கொண்டை ஊசி வளைவுகள் உள்ளன. இதில் 24 மணி நேரமும் வாகனங்கள் சென்றுவந்த நிலையில் வன விலங்குகள் சாலையைக் கடக்கும் போது, வாகனங்களில் சிக்கி உயிரிழந்து வருவதாக பல்வேறு புகார்கள் எழுந்தன. இதன்காரணமாக பிப்.10ஆம் தேதி முதல் திம்பம் மலைப்பாதை வழியாக இரவு நேர வாகன போக்குவரத்துக்கு தடை விதிக்கப்பட்டது. இதன் விளைவாக பகலில் அதிகளவிலான வாகனங்கள் ஒரே நேரத்தில் சென்றுவருகின்றன.
திம்பம் மலைப்பாதையில் பழுதான லாரி: கடும் போக்குவரத்து பாதிப்பு
திம்பம் மலைப்பாதையில் சரக்கு லாரி பழுதாகி நின்றதால் மூன்று மணி நேரம் போக்குவரத்து பாதிக்கப்பட்டது.
இந்த நிலையில், நேற்று(பிப்.20) மாலை கர்நாடக மாநிலத்திலிருந்து தமிழ்நாடு நோக்கி கிரானைட் கற்களை ஏற்றிய வந்த சரக்கு லாரி 9ஆவது கொண்டை ஊசி வளைவில் திரும்பும் போது டயர்கள் கழன்று பழுதாகி நின்றது. இதன் காரணமாக தமிழ்நாடு கர்நாடக மாநிலங்களுக்கு இடையே 3 மணி நேர போக்குவரத்து பாதிப்பு ஏற்பட்டது. மாலை நேரம் நெருங்கியதால் செல்லவிருந்த வாகனங்கள் போக்குவரத்து பாதிப்பால் தடுத்து நிறுத்தப்பட்டன.
இதையும் படிங்க:திம்பம் மலைப்பாதையில் 17 மணி நேரமாகக் காத்திருக்கும் வாகனங்கள்!