ஈரோடு மாவட்டம் சத்தியமங்கலத்திலிருந்து லாரி ஒன்று, மைசூருக்கு தவிட்டு மூட்டைகளை ஏற்றிக்கொண்டு திம்பம் மலைப்பாதை வழியாகச் சென்று கொண்டிருந்தது. சத்தியமங்கலம் வடக்குப்பேட்டையைச் சேர்ந்த அருண்குமார் என்பவர் லாரியை ஓட்டினார். மைசூரில் நடைபெற்றுக் கொண்டிருக்கும் தசரா பண்டிகையைக் காண்பதற்கு அதே பகுதியைச் சேர்ந்த கிருஷ்ணன், வளையல் வியாபாரி சங்கர் ஆகிய இருவரும் லாரியில் பயணித்தனர்.
அப்போது திம்பம் மலைப்பாதையில் லேசான மழைத் தூறிக்கொண்டிருந்தது. இந்நிலையில், திம்பம் 9ஆவது வளைவில் சென்று கொண்டிருந்தபோது கட்டுப்பாட்டை இழந்த லாரி, மேலே ஏறமுடியாமல் பின்னோக்கி வந்து சாலையோர சுவற்றை இடித்துக்கொண்டு 7ஆவது வளைவில் விழுந்தது.