ஈரோடு:சத்தியமங்கலம் புலிகள் காப்பகம், தாளவாடி வனப்பகுதியில் ஏராளமான சிறுத்தைகள் உள்ளன. வனத்தை ஒட்டியுயுள்ள சூசைபுரம், தொட்டகாஜனூர், பீம்ராஜ் நகர் பகுதிகளில் கடந்த இரண்டு மாதங்களாக ஆடு, மாடு, காவல் நாய் ஆகியவற்றை சிறுத்தை தாக்கிக் கொன்றுள்ளது.
இதனால் அப்பகுதி மக்கள் பெரும் அச்சத்தில் உள்ளனர். சிறுத்தை அச்சுறுத்தலால் இரவு நேர விவசாயப் பணிகள் பாதிக்கப்பட்டுள்ளன. ஆடு, நாய்களை வேட்டையாடிய பின் சிறுத்தை அங்குள்ள கல்குவாரிக்குச் சென்று பதுங்கி கொள்வதை வாடிக்கையாக வைத்துள்ளது.
சிசிடிவி மூலம் கண்காணிப்பு
அதனைப் பிடிக்க வனத்துறையினரும் பல்வேறு முயற்சிகளை செய்துவருகின்றனர். அதற்காக வைக்கப்பட்டுள்ள கூண்டில் சிக்காமல், போக்கு காட்டி வருகிறது சிறுத்தை. தொடர்ந்து இப்பகுதியில் கால்நடைகளை வேட்டையாடிவருவதால் விவசாயிகள் கண்காணிப்பு கேமராக்களை வைத்து கண்காணித்துள்ளனர்.