தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / city

சிறுத்தை கடித்து 7 ஆடுகள் உயிரிழப்பு: கூண்டுவைத்துப் பிடிக்க பொதுமக்கள் கோரிக்கை - Leopard attack

சத்தியமங்கலம் அருகே கொட்டைகையில் கட்டிவைக்கப்பட்ட ஆடுகளை கடித்துக் கொன்ற சிறுத்தையைக் கூண்டுவைத்துப் பிடிக்க வனத் துறையினருக்குப் பொதுமக்கள் கோரிக்கைவிடுத்துள்ளனர்.

சிறுத்தை கடித்து 7 ஆடுகள் உயிரிழப்பு
சிறுத்தை கடித்து 7 ஆடுகள் உயிரிழப்பு

By

Published : Oct 18, 2021, 9:19 AM IST

ஈரோடு:சத்தியமங்கலம் அருகேவுள்ள கெம்பநாயக்கன்பாளையம் பெரும்பள்ளம் அணை பகுதியைச் சேர்ந்தவர் ரங்கசாமி. இவர் 15-க்கும் மேற்பட்ட வெள்ளாடுகளை வளர்த்துவந்தார். நாள்தோறும் மேய்ச்சலுக்கு ஆடுகளை ஓட்டிச் செல்லும் ரங்கசாமி வழக்கம்போல் தனது வீட்டின் முன்புறமுள்ள கொட்டகையில் ஆடுகளைக் கட்டிவைத்துவிட்டு உறங்கச் சென்றுவிட்டார்.

இந்நிலையில் நேற்று (அக். 17) காலை ரங்கசாமி எழுந்துசென்று ஆட்டுக் கொட்டகையில் பார்த்தபோது ஆடுகள் இறந்துகிடந்ததோடு ஒரு சில ஆடுகள் கழுத்தில் ரத்தக்காயத்துடன் உயிருக்குத் துடித்துக்கொண்டிருந்தன. இதனைக்கண்டு திகைத்துப்போன ரங்கசாமி, அப்பகுதியில் சிறுத்தையின் கால்தடம் பதிவாகியிருந்ததைக் கண்டு அதிர்ச்சியடைந்தார்.

பின்னர், இது குறித்து உடனடியாக சத்தியமங்கலம் வனத் துறையினருக்குத் தகவல் தெரிவித்தார். தகவலறிந்த சத்தியமங்கலம் வனத் துறை அலுவலர்கள் சம்பவ இடத்திற்குச் சென்று பார்த்தபோது கொட்டகையில் இருந்த ஏழு வெள்ளாடுகள் சிறுத்தை கடித்து உயிரிழந்ததும் மூன்று ஆடுகள் உயிருக்குப் போராடியதும் தெரியவந்தது.

சிறுத்தையைப் பிடிக்க பொதுமக்கள் கோரிக்கை

சிறுத்தையின் கால்தடத்தை ஆய்வுசெய்த வனத் துறையினர் வெள்ளாடுகளைக் கடித்துக் கொன்றது சிறுத்தைதான் என உறுதிசெய்தனர். சிறுத்தை கடித்து உயிரிழந்த வெள்ளாடுகளுக்கு உரிய இழப்பீடு வழங்க நடவடிக்கை எடுக்கப்படும் என வனத் துறையினர் நம்பிக்கைத் தெரிவித்தனர்.

இருப்பினும் அப்பகுதியில் வசிக்கும் விவசாயிகள், சிறுத்தை நடமாட்டம் உள்ளதால் மிகுந்த அச்சமடைந்து, வனத்தை விட்டு வெளியேறி கால்நடைகளை வேட்டையாடும் சிறுத்தையை கூண்டுவைத்துப் பிடிக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் எனக் கோரிக்கைவிடுத்துள்ளனர்.

இதையும் படிங்க:நாயை வேட்டியாடிய சிறுத்தை - வெளியான சிசிடிவி காட்சிகள்

ABOUT THE AUTHOR

...view details