ஈரோடு: கேகே நகர் பகுதியைச் சேர்ந்தவர் திவ்யா சாரோன். இவர் மருத்துவராக பணிபுரிந்து வருகிறார். இவருக்கும் கன்னியாகுமரி மாவட்டம் மார்த்தாண்டத்தை சேர்ந்த, மருத்துவர் அனுப் என்பவருக்கும் 2010ஆம் ஆண்டு திருமணம் நடைபெற்றது.
அனுப் மற்றும் அவரது குடும்பத்தினர் வரதட்சணையாக 110 பவுன் நகை, ரூ.30 லட்சம் பெற்றதாக கூறப்படுகிறது.
மேலும் வரதட்சணை கேட்டு அனுப் தன் மனைவியை கொடுமைப்படுத்தியதாக மனைவி தரப்பில் குற்றம்சாட்டியுள்ளனர்.
நீதிமன்றத்தில் வழக்கு
இந்நிலையில், கணவர் மற்றும் அவரது குடும்பத்தினர் மீது திவ்யா உயர்நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்துள்ளார்.
நீதிமன்ற உத்தரவின் பேரில் மருத்துவர் அனுப் மீது வழக்குப்பதிவு செய்த ஈரோடு தாலுகா காவல் நிலையத்தினர் பின்னர் அவரை கைது செய்தனர்.
இதற்கிடையே மருத்துவர் அனுப் நெஞ்சு வலிப்பதாக கூறியதால் அவருக்கு சிகிச்சை மேற்கொள்ளப்பட்டது.. சிகிச்சைக்குப் பின்னர் மருத்துவர் அனுப் சிறைச் சாலைக்கு அனுப்பி வைக்கப்பட்டார்.
இதையும் படிங்க:சென்னையில் கொட்டித்தீர்த்த மழை - முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் நள்ளிரவில் ஆய்வு