ஈரோடு மாவட்டம் சத்தியமங்கலத்தில் கொங்குநாடு மக்கள் தேசிய கட்சியின் பொதுச்செயலாளர் ஈஸ்வரன் தலைமையில் தருமபுரி மாவட்டம் மாரண்டஹள்ளி பகுதியில் குளங்களை தூர்வார கோரி ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. இதை தடுத்து நிறுத்திய காவல் துறையினர் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டவர்களை கைது செய்தனர்.
இதைக் கண்டித்து ஈரோடு கொமதேக புறநகர் மாவட்ட செயலாளர் முத்துசாமி தலைமையில் 100க்கும் மேற்பட்டோர் சத்தியமங்கலம் - மைசூர் தேசிய நெடுஞ்சாலையில் மறியலில் ஈடுபட்டனர்.
கொமதேக பொதுச்செயலாளர் ஈஸ்வரனை உடனடியாக விடுவிக்க கோரி கோஷம் எழுப்பியவர்களை சத்தியமங்கலம் காவல் துறையினர் கைது செய்து திருமண மண்டபத்தில் அடைத்தனர்.
KMDK members arrested for continuous protest அதேபோன்று விஜயமங்கலம் சுங்கச்சாவடி அருகே சேலம் கோவை தேசிய நெடுஞ்சாலையில் அக்கட்சியின் பொருளாளர் பாலு தலைமையில் 100க்கும் மேற்பட்டோர் திடீர் சாலை மறியலில் ஈடுபட்டனர். உடனடியாக அங்கு வந்த பெருந்துறை காவல்துறையினர் சாலை மறியல் போராட்டத்தில் ஈடுபட்டவர்களை கைது செய்தனர்.
இதையும் படிங்க:மருத்துவக் கல்லூரி இடங்கள் கோரிய வழக்கு: உயர் நீதிமன்றம் தள்ளுபடி!